/indian-express-tamil/media/media_files/2025/08/29/tamilnadu-anjhj-2025-08-29-19-44-55.jpg)
தஞ்சாவூரில், புதுமனை புகுவிழாவில் வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான முறையில் நம் பாரம்பரியத்தை போற்றும் வகையில் சிறுதானியங்கள் கொடுத்து குடும்பத்தினர் மகிழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் காயத்திரி நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டிய மோகன்தாஸ் என்பவர், தனது புதுமனை புகுவிழாவில் புதுமையான மற்றும் நம் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற வகையில் மக்கள் சக்தி இயக்க சார்பில் சிறுதானியங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்கள். பொதுவாக புதுமனை புகுவிழாவிற்கு வருவார்கள் பணம், கடிகாரம், சாமி படங்கள், போன்ற பொருள்கள் வழங்குவார்கள்.
ஆனால் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சேர்ந்தவர்கள் புதுமையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதோடு, நமது பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க முயற்சி செய்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்தார்கள். சிறு தானியங்கள் சாமை, திணை, வரகு, மாப்பிள்ளை சம்பா, கம்பு, சோளம், கேழ்வரகு, அச்சு வெள்ளம், போன்ற 10 மேற்பட்ட தானியங்கள் வழங்கினார்கள்.
இது அங்கு வந்திருந்தவர்களை மிகவும் கவர்ந்தது. சிறுதானியங்களின் நன்மைகள் குறித்தும். அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்ததாகத் தெரிவித்தனர். இந்த நூதனமான முயற்சிக்கு விருந்தினர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்வு பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை முன்னிறுத்தும் ஒரு புதிய போக்கைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.