தமிழகத்தில் மதுக்கடைகளளை மூட வேண்டும் என்று பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், டாஸ்மாக் நிறுவனம் சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மது விற்பனையை அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சமீபத்தில் மண்டபங்களில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மது வழங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தாமல் மதுவிற்பனையை மேலும் அதிகரிக்கவே அரசு முயற்சிக்கிறது என்று எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில், டாஸ்மாக் நிறுவனம தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை தொடங்கி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Mall Shops) செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
#இன்றைய_விடியல்!!#காசு_போட்டா_கைலை_பாட்டில்!
— கோவை மனோஜ் (@Kovaimanoj) April 28, 2023
கோயம்பேடு வணிக வளாகத்தில்
டாஸ்மாக் தானியங்கி இயந்திரம்!!
திராவிட மாடல்னாதிராவிட மாடல் தான்யா!! 👌👌 pic.twitter.com/h1RIYDhi2B
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை (Mall Shops) திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இவ்வியந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொது மக்களால் அணுக முடியாது. இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil