கொரோனா பொது முடக்கநிலை காலத்தில் சில கட்டுப்பாடுகளுடன், சமூக இடைவெளி பின்பற்றப்படும் என்ற அறிவிப்புடன் தமிழக அரசு மதுபான கடைகளை திறந்தது. இருப்பினும், சமூக இடைவெளிக்கான விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவில்லை என்று கண்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பித்தது. தேவைப்படும் பட்சத்தில், மதுபானங்களை ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யலாம் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீடு செய்துள்ளது.
இருப்பினும், மது விற்பனை குறித்த வேறொரு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு, முன்னதாக விசாரிக்கப்பட்டது. அப்போது ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து, ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும், பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும், என நீதிபதி அறிவுறுத்தினார். ஆகையால் தற்போது தமிழக அரசின் அடுத்த திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
மே- 7,8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் திறக்கப்பட்ட மதுக்கடைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. சமூக ஊடங்களில் 'டாஸ்மாக்' ஹஷ்டேக்கில் பலர் வேடிக்கையாக தங்கள் கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.
சில, வேடிக்கையான ட்வீட்களை இங்கே காணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil