டாஸ்மாக் வீடியோ கவரேஜ்: ஆதார் கேட்கவில்லை, சமூக இடைவெளி கறார்

அனைவரும் முகக்கவசம் அணிந்தனர் என்று சொல்ல முடியாது. ஆனால், போதுமான  சமூக விலகல் நெறிமுறை கடைபிடிக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி மது விற்பனையை விட, இன்று மக்களிடையே பொறுமையும், கட்டுப்பாடும் அதிகமாக காணப்படுகிறது.

By: Updated: May 16, 2020, 03:46:12 PM

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, இன்று தமிழகத்தில் மதுபானக் கடைகளை தமிழக அரசு திறந்தது. கொரோனா நோய் பரவல் அதிகமாக காணப்படும் பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளுவர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. ஆதார் எண் கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் தடை செய்ததால், இன்று ஆதார் எண் போன்ற கூடுதல் நிபந்தனைகள் மதுப்பிரியர்களிடம் கேட்கப்படாது என்று டாஸ்மாக் தெளிவுபடுத்தியது.

 


இருப்பினும், மதுபானக் கடைகளில் நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே கடைகளுக்கு வர முடியும். சேலம் குரங்கு சாவடியில் களப்பணிக்கு சென்ற எமது நிருபர், “சேலத்தில் பெருவாரியான மதுக் கடைகள் சரியாக காலை 10 மணியளவில் திறக்கப்பட்டது. இந்த பகுதிகளில் அதிகமான கூட்ட நெருசல் இல்லை. 4 வரிசையில் 25 பேர் வீதம் மட்டுமே டாஸ்மாக் கடை பகுதிகளில்  நிற்க அனுமதிக்க்கப்பட்டனர் . இவர்கள், மதுவை வாங்கிய பின்பு அடுத்த 100 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.

 

மேலும், அவர், “அனைவரும் முகக்கவசம் அணிந்தனர் என்று சொல்ல முடியாது. ஆனால், போதுமான  சமூக விலகல் நெறிமுறை கடைபிடிக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி மது விற்பனையை விட, இன்று மக்களிடையே பொறுமையும், கட்டுப்பாடும் அதிகமாக காணப்படுகிறதோ என்று யோசிக்கும் வகையில் உள்ளது?” என்று தெரிவித்தார்.

‘ஒன்றிணைவோம் வா’ வெற்றியா? தோல்வியா?

 

டோக்கன் நடைமுறை மக்களிடம் பொறுமையை கொண்டு வந்திருக்கலாமா?  என்று கேட்டதற்கு,” இருக்கலாம், டோக்கன் உளவியல் ரீதியாகவும் வேலை செய்யும். உதாரணமாக,    டோக்கன் கையில் இருப்பதால் எப்படியும் மது பாட்டில்கள் கிடைத்து விடும்  என்ற எண்ணம் பொறுமைக்கு வழிவகுக்கும். காவலர்கள் கண்காணிப்பில் டோக்கன் கொடுக்கப்படுகிறது. இருந்தாலும், வரிசையில் நின்ற பலரிடம்  டோக்கன்  காணப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இன்றைய நாள் டோக்கன்

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil</span

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu tasmac shop reopen tipplers 500 tokens per tasmac shop

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X