டாஸ்மாக் நிபந்தனைகள்: ஒரு கடையில் ஒரு நாளில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன்
சமூக விலகல் நெறிமுறையை பராமரிக்கும் முயற்சியாக, தினமும், ஒரு வண்ணத்தில், ஏழு நாட்களுக்கும் டோக்கன் வழங்கப்படும். ஒரு நாளைக்கு, 500 டோக்கன்களை மட்டுமே வினியோகிக்க வேண்டும்.
சமூக விலகல் நெறிமுறையை பராமரிக்கும் முயற்சியாக, தினமும், ஒரு வண்ணத்தில், ஏழு நாட்களுக்கும் டோக்கன் வழங்கப்படும். ஒரு நாளைக்கு, 500 டோக்கன்களை மட்டுமே வினியோகிக்க வேண்டும்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக, கடந்த மே 6- 8 தேதிகளில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நேற்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, மதுபானக் கடைகள் இன்று வழக்கம் போல் திறக்கப்படும் என்று டாஸ்மாக் அறிவித்தது.
Advertisment
டாஸ்மாக் சார்பில் ஆஜரான சீனியர் கவுன்சல் முகுல் ரோஹத்கி, ஆன்லைனில் மட்டுமே மதுபானத்தை விற்பனை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஆபத்தானது என்று வாதிட்டார். மதுபானம் கலப்படம் செய்வதற்கான வாய்ப்பு அதிகரிப்பதோடு, வீட்டிற்கு மதுவைக் கொண்டு செல்வோர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்த இது வழிவகுக்கும்" என்று தெரிவித்தர்.
Advertisment
Advertisements
மேலும், மது வாங்கவருவோர் ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற கடந்த மே 6ம் தேதி சென்னை நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகளுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. டாஸ்மாக் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், இந்த நிபந்தனை மக்களின் தனியுரிமைக்கு எதிரானது என்று கூறினார். மதுபானங்களை வாங்குவது அவற்றை நுகர்வது என்பது தனிப்பட்டோரின் விருப்பமாகும். ஆதார் எண், பெயர்,முகவரி போன்ற விவரக்குறிப்புகளை கட்டாயமாக்குவது சுரண்டல்களுக்கு வழிவகுக்கும் என்றும் வாதிட்டார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொது சுகாதாரத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சென்னை உயர்நீதிமன்ற தீரிப்பு அமைந்துள்ளது. கொரோனா போராட்த்தில் சமூக விலகல் நெறிமுறையே மிகப்பெரிய கேடயமாக உள்ளது என்று பொது நல வழக்கு சார்பாக வாதாடிய பி வி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கிடையே, மாநிலத்தில் பிற பகுதிகளில் செயல்படும் 3,600 மதுவிற்பனை நிலையங்களை மீண்டும் திறக்கப்படுவதாக டாஸ்மாக் அறிவித்தது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் வரும் செங்கல்பட்டு/காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள மதுக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். மால்கள், பெரும் வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக விலகல் நெறிமுறையை பராமரிக்கும் முயற்சியாக, தினமும், ஒரு வண்ணத்தில், ஏழு நாட்களுக்கும் டோக்கன் வழங்கப்படும். ஒரு நாளைக்கு, ஒரு மதுக்கடை 500 டோக்கன்களை மட்டுமே வினியோகிக்க வேண்டும். அந்த டோக்கன்களை கடைகளில் கொடுத்து, மதுபானங்களை மக்கள் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil