இனி மதியத்திற்கு பிறகு தான் சுதி ஏற்றலாம்: டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு

Tamilnadu News Update : கொரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் வருமானம் குறைந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Tasmac Timing Change Update : தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கும் நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வந்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் பொதுமக்களின் அத்தியவசிய தேவைக்கு உண்டாக கடைகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வர தொடங்கிய நிலையில், அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

அப்போது டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டு வந்த நிலையில்,இரவு நேர ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு இரவு 8 மணிக்கு டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் கொரோனா தொற்று அதிகம் இருந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல், தொற்று பாதிப்பை குறைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து டோக்கன் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், பெரும்பாலான பகுதிகளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்றுக்கு முன் இருந்தது போல டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு அரசு 10 மணிக்கு அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் வருமானம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு இந்த நேர மாற்றம் காரணமாக வருமானம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது

மேலும் டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் செய்யப்பட்டாலும், ஊழியர்கள் மற்றும் வடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu tasmac timing change tn government official announced

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express