கோவை நடைபெற்ற பாஜக பிரமுகர் மகன் திருமண விழாவில், தெலுங்கான மற்றும் புதுச்சேரி மாநில தமிழிசை சௌந்திரராஜன் உணவு பரிமாறியது குறித்து பாஜகவினர் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக பாஜகவில் மாநில பொருளாளராக உள்ளவர் எஸ்.ஆர்.சேகர். இவரதுமகன் திருமணம் கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், தெலுங்கான மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன, தமிக பாஜக தலவர் அணணாமலை,தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், எம்எல்ஏ. காந்தி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்ற போது ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன். அனைவருக்கும் உணவு பரிமாறி ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ஜி.கே.நாகராஜ் கூறுகையில், இந்த திருமணத்தில் முக்கிய நிர்வாகிகள் சாப்பிட தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அப்போது அங்கு இருந்த தமிழிசை உள்ளிட்டோரை சாப்பிட அழைத்தோம் ஆனால் வேண்டாம் என்று கூறிய தமிழிசை கட்சியின் உண்மையான உழைபபாளி உங்களுக்கு பரிமாறுவதில் பெருமை என்று சொல்லி, அண்ணாமலை காந்தி, என எங்கள் மூவருக்கும் உணபு பரிமறினார். இந்த ஆச்சரியம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 2 மாநிலங்களுக்கு ஆளுநராக இருப்பவர் உணவு பரிமாறுவது சாதாரண விஷயம அல்ல.
வேறு யாரும் இதை செய்ய மாட்டார்கள். மற்ற கட்சிகளில் ஆளுநரின் அருகில் கூட செல்ல முடியாது. ஆனால் தமிழகத்தில் தாமரை மலரும் என்று தன்னம்பிக்கையுடன் கூறியவர். தற்போது தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு இவரும் ஒரு காரணம். அவரின் கடின உழைப்புதான் அவரை இங்கு கொண்டு வந்துள்ளது. என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil