Advertisment

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: நாட்டிலேயே மதுரையில் அதிக வெயில் பதிவு

Tamilnadu Weather Forecast Latest Updates: தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa

Tamilnadu Weather Forecast Latest Updates

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisment

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது; ’மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் செப்.22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி வரை இருக்கும்.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில், இன்று முதல் 20 ஆம் தேதி வரை, மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம், என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை நாட்டிலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.54 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மேலும், மதுரை நகரம் 103.64, நாகை 102.38, தஞ்சாவூர், ஈரோட்டில் தலா 102.2, சென்னை மீனம்பாக்கம் 101.12, பரமத்தி வேலூர் 100.76, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை தலா 100.4, கடலூர், அதிராம்பட்டினம், திருச்சி தலா 100.04 டிகிரி என மொத்தம் 12 இடங்களில் 100 டிகிரியைக் கடந்துள்ளது. புதுச்சேரியில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment