பாடநூல் கழகத் தலைவராக லியோனி நியமனம் சரியா, தவறா? ட்விட்டரில் மோதல்

Dindigul I. Leoni Support and opposition : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகளின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் வந்துகொண்டிருக்கிறது.

தமிழக பாடநூல் மற்றும் கல்வியல் பணிகளின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணி நியமனத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர், மேடை பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முக திறமை கொண்டவர் திண்டுக்கல் ஐ.லியானி. திண்டுக்கல் மாவட்டத்தில் 1954-ம் ஆண்டு பிறந்த இவர், தனது தொடக்க கால அரசியலை திமுகவில் இருந்து தொடங்கினார். 1997-ம் ஆண்டு வெளியான கங்கா கவுரி படத்தில் நடித்திருந்த இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் கலைமாணி விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தொகுதித்து வழங்கிய இவர், பட்டிமன்றங்களில் நடுவராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த 2011 மற்றும் 2016 சட்டசபை, 2014 நாடாளுமன்றம் ஆகிய தேர்தலில் திமகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளி தருணத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கடசியை சிலிப்பர் சேல் என்று இவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் புதிதாக ஆட்சியில் அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து பல துறைகளில் அதிகரிகள் மாற்றம் செய்து வரும் நிலையில், தமிழக பாடநூல் மற்றும் கல்வியல் பணிகளுக்கான தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இவரது நியமனத்திற்கு ஆதரவுமு: எதிர்ப்பும் சம அளவில் வந்துகொண்டிருக்கிறது.

மேலும் அவர் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பட்டிமன்றங்களிவ் பெண்கள் குறித்து அவதூராக பேசி வந்த்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் பதவி நியமனத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பலரும் அவர் பெண்கள் குறித்து கூறிய கருத்தையே முன்வைத்து வருகிறனர். இதில் பிரச்சாரத்தில் இவரது ஆபாச பேச்சுக்கு எதிராக பெண்கள் பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிகழ்வும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்துள்ளது. இதனால் பெண்கள் குறித்து அவதூராக பேசிய அவருக்கு அரசுப்பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு தரப்பினர் இவரது நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாடநூல் கழகம் மற்றும் கல்வியல் பணிகளுக்காக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக இனைஞரணி தலைவது அன்புமனி ராமதாஸ், திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ஆனால் அன்புமணி ராமதாஸ் கருத்தக்கு எதிர்ப்பு தெரிவித்து லியோனிக்கு அதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் லியோனி பாமகவுக்கு எதிராக பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu textbook corporation chairman dindigul i leoni support and opposition

Next Story
முதல்ல இந்த ஓட்டை சைக்கிள தூக்கி போட்டுட்டு ஒரு ஆடி கார் வாங்கணும்: இணையத்தில் பறக்கும் மீம்ஸ்Chennai city Tamil News: YouTuber Madan’s Wife Krithika’s Comment On Audi Car gets Hilarious Trolls In Social Media
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com