தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தவும் ஜவுளி சார்ந்த துறையை வலுபடுத்தவும் கோவையை சேர்ந்த சி.ஐ.ஐ (CII) அமைப்பு தைவான் நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்து இத்துறை மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
தைவான் நாட்டு ஜவுளி தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என இத்துறை சார்ந்த தொழில் வல்லுநர்களை தமிழகம் அழைத்து வந்த சி.ஐ.ஐ ("CII") அமைப்பு தமிழகத்தின், ஜவுளி கட்டமைப்பு, ஜவுளி உற்பத்தி திறன், ஜவுளி தொழில் சார்ந்த பல்வேறு கட்டமைப்புகளை தைவான் நாட்டு தொழில் வல்லுநர்களுக்கு காட்சிபடுத்தியது.
தமிழகத்தின் ஜவுளி தொழில் கட்டமைப்புகளை ஆய்வு செய்த தைவான் தொழில் துறையினர் சி.ஐ.ஐ அமைப்புடன் இனைந்து இத்துறையை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தைவான் நாட்டு தொழில் முனைவோர்களுடன் தமிழக ஜவுளி தொழில் அமைப்பினர் சிஐஐ அமைப்பினருடன் கலந்து கொண்ட கருத்தரங்கம் கோவை சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
இதில் தைவான் நாட்டு தொழில் அமைப்பினருக்கு தேவையான ஜவுளி தொழில் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து கலந்துரையாடபட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சி.ஐ.ஐ ("CII")அமைப்பின் தமிழ்நாடு நெசவுத்துறை குழு துணை தொகுப்பாளர் டாக்டர். வேல்.கிருஷ்ணா மற்றும் கோபி கிருஷ்ணா ஆகியோர் கூறுகையில், தைவான் நாட்டு ஜவுளி தொழில் குறித்து நான் உள்பட 12 தொழில் அமைப்பினர்களுடன் தைவான் நாட்டிற்க்கு சென்று அங்குள்ள ஜவுளி கட்டமைப்புகளை கண்டு ஆய்வு செய்ததுடன் அவர்களின் தொழில் துறைக்கு ஏற்ற தமிழ்நாட்டு உற்பத்திகளை காட்சிபடுத்தினோம்.
எங்களுக்கு தைவான் டைக்ஸ்டைல் பெடரேஷன் என்ற பழைமையான அமைப்பு எங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் டெக்ஸ்டைல் துறையின் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளின் உற்பத்திகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கபட்டது. இதனை தொடர்த்து அவற்றை நேரில் கான தைவான் நாட்டு உற்பத்தியாளர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் இங்குள்ள பல்வேறு நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பின்னர் தமிழக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதனால் இருநாட்டு ஜவுளி துறை மேம்படுவதுடன் பல லட்ச கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து நலிவடைந்த நிலையில் உள்ள ஜவுளி துறை மீண்டும் முன்னேற்றம் கானும் என்று நம்புவதாக தெரிவித்தனர். மேலும் குறிப்பாக இரு நாட்டு கூட்டு முயற்சியால் ஜவுளித்துறை நிச்சயம் புத்துயிர் பெறும் என்று நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக அரசின் நெசவுத்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“