வேதாரண்ய உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரையின் 95-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தண்டி யாத்திரை நினைவு தூணில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான எல்.ரெக்ஸ் தலைமையில், காங்கிரஸ் இயக்க மாநில தலைவர் பூக்கடை பன்னீர் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பொருளாளர் முரளி, இயக்க நிர்வாகிகள் சிவசண்முகம், சுப்ரமணியன், குலாம் மொய்தீன், பாலாஜி நகர் பாலு, தங்கவேல், வந்தேமாத்திரம் பழனிச்சாமி, கோவிந்தராஜ், கலியபெருமாள், பழனியாண்டி, தட்சணாமூர்த்தி, மணி, தங்கமணி, கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், அரியமங்கலம் அழகர், புத்தூர் மலர் வெங்கடேஷ், உறையூர் பாக்யராஜ், பொன்மலை பாலு, பஞ்சப்பூர் மணிவேல், அன்பு ஆறுமுகம்.
அணி தலைவர்கள் அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், ஐஎன்டியுசி வெங்கட், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தின், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், இந்திரா தோழி மாரீஸ்வரி, ஐடி பிரிவு கிளமெண்ட், இலக்கிய பிரிவு பத்பநாதன், ஊடகப்பிரிவு செந்தில், நிர்வாகிகள் தியாகி ராஜா, ராமர், ரவி சுந்தரம்,பாண்டியன்,வளன்ரோஸ், எழில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்