scorecardresearch

வருமான வரி வரம்பை ரூ 8 லட்சமாக உயர்த்த கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்பாட்டம்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரூபாய் 5 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பரம ஏழைகளாக ஒன்றிய அரசு அறிவித்து வருமான வரி வரவை 8 லட்சமாக உயர்த்தக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

வருமான வரி வரம்பை ரூ 8 லட்சமாக உயர்த்த கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்பாட்டம்

பி.ரஹ்மான் கோவை

வருமான வரி வரம்பை ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 8 லட்சம் ஆக உயர்த்த கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக கோவை வருமான வரி துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அறிவித்துள்ள உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் உயர் சாதி ஏழைகளுக்கு தரப்பட்ட 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதன் மூலம் உயர் சாதியில் ஏழைகளுக்கு வரையறுக்கப்பட்ட மாத வருமானம்  66,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டு வருமானம் 8 லட்சம் என்பதையும் உச்சநீதிமன்றம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால் இந்திய ஒன்றிய அரசின் வருமான வரித்துறை தனிநபர் வருமானத்தில் ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரி வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரூபாய் 5 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பரம ஏழைகளாக ஒன்றிய அரசு அறிவித்து வருமான வரி வரவை 8 லட்சமாக உயர்த்தக்கோரி  தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரி துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ரூபாய் 8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு இருப்பதால் வருமான வரி வரம்பை ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 8 லட்சம் ஆக மத்திய அரசு உயர்த்த கோரி கோசங்கள் எழுப்பப்பட்டது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu thanthai periyar party protest about increase in income limit to 8 lakhs