/indian-express-tamil/media/media_files/TAOupmyyGKwKMsxtMG85.jpg)
குமரி மாவட்டத்தில் மூன்று வட்டங்களுக்கு இன்று(ஆகஸ்ட்_20) சிறப்பு விடுமுறை அறிவித்து ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறப்பு மிகுந்த ஒரு சீர் சிறுத்தவாதியாக கேரள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினம் ஆகஸ்ட் 22-ம் நாள் ஆண்டுதோறும் கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்ரீ நாராயண குரு வின் உன்னதமான பரப்புரை. மதம் எதுவானாலும் மனிதன் நன்றாக வேண்டும் என்ற கருத்தை கேரள மக்கள் மத்தியில் விதைத்தவர். குமரி மாவட்டத்தில் முதல் முதலாக இவ்வாண்டு (ஆகஸ்ட்20) ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாள் தினத்தில். திருவட்டார் விளவங்கோடு அகஸ்தீஸ்வரம் ஆகிய மூன்று வட்டங்களுக்கு மட்டும் முதல் முறையாக, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசனைப்படி,அரசு செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கார் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் 14.09.2024 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
த.இ.தாகூர்., குமரி மாவட்டம்
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.