திருச்சி பொன்நகர் ரயில் கல்யாண மண்டபத்தில் தமது கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக சரியாக தவறாமல் கொடுக்கக்கூடிய தண்ணீர் கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் உயிர் பிரச்சனையாக இருப்பதால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 13.28 டி.எம் சி தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
விவசாய கருவிகள், அறுவடை இயந்திரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கட்சி பாகுபாடு இன்றி வழங்க வேண்டும். அரசியல் கூட்டணிகளுக்கு அப்பாற்பட்ட அரசாக திமுக அரசு செயல்பட வேண்டும். திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கும் விதைகளை தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கங்கள் வாயிலாக வழங்க வேண்டும். அரசு பஸ்களை முறையாக பராமரித்து, விபத்துகள் ஏற்படா வண்ணம் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் வேளாண் இயந்திரங்கள கட்சி் பாகுபாடு இன்றி பதிவு மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும்.
அரசியல்கட்சிகளின் பரிந்துரைப்படி வழங்குவதை நிறுத்த வேண்டும். நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியின் கொள்கை கோட்பாடுகள் அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதற்காக கொள்கை கோட்பாடுகளை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்சியின் ஏடீம், பி டீம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு. அவருடைய கட்சி செயல்பாடுகள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் பருவ மழை துவங்கி இருப்பதால், சுகாதாரத்துறை டெங்கு போன்ற நோய் பரவாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“