TNPSTNPSC Group 4, TNPSC group 2, 2a exams date : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2022-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ளளது. இந்த அறிக்கையில், 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு சார்ந்த ஊழியர்கள், பணியானர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இந்த வகையில் ஆண்டு தோறும் பல தேர்வுகள் நடத்தப்படுகிறன்றன.
கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவசன ஊழியர்கள் என பலரும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளபப்டுவது குறித்து அரசு சார்பில் திட்ட அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி தற்போது 2021-ம் ஆண்டு இறுதிகட்டத்திற்கு வந்துள்ள நிலையில், 2022-ம் ஆண்டுக்கான அரசு பணி நியமனங்கள், போட்டித்தேர்வு மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்து திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குருப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுகள் அறிவிக்கப்படும் என்றும், மார்ச் மாதம் குருப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் விஏஓ மற்றும் குருப் 4 தேர்வுகளில் தமிழ் தாளில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும், கூடுதல் மதிப்பெண் பெற்றால் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போன்ற தேர்வுகள் நடத்தப்பட்வில்லை. இதனால் அடுத்த ஆண்டில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் குரூப் 2 பிரிவில், 5831 பணியிடங்களும், குரூப் 4 பிரிவி்ல் 5258 பணியிடங்களும் காலியாக உள்ளது. தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு இந்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் தேர்வு அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. மேலும் தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களுடன் புறப்படும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்கானிக்கப்படும் என்றும் ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின விவரங்களை கொண்டே விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரும் வழியில் முறைகேடு செய்யப்பட்டது.
இதனால் முறைகேட்டை தடுக்க இனி ஒஎம்ஆர் விடைத்தாளில் இருந்து தேர்வரின் விபங்கள் தனியாக பிரிக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil