தமிழகம் மற்றம் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரனமாகவும் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் , "தமிழகம் மற்றம் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரனமாகவும் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.