Advertisment

Tamil News Today: தமிழ்நாட்டில் 2,000க்கு கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

மூன்றாவது அலை தொடர்பாக, சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை, பொது மக்கள் நம்ப வேண்டாம் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழகத்தில் புதியதாக 1,896 பேருக்கு கொரோனா; 23 பேர் பலி

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நியமனம்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க சித்துவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு - பள்ளிகள் முலம் விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு திட்டம் ஒத்திவைப்பு

மத்திய பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு(சியுசிஇடி) 2021-22 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்ட மாட்டாது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளுக்கு பின் கல்லூரி மாணவர் சேர்க்கை

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழகக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:13 (IST) 19 Jul 2021
    ஒட்டுக்கேட்பு விவகாரம்: இந்தியாவை அவமானப்படுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கை - அமித்ஷா

    பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


  • 20:11 (IST) 19 Jul 2021
    அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம் - அப்பல்லோ மருத்துவமனையில் திவிர சிகிச்சை

    அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 19:07 (IST) 19 Jul 2021
    தமிழ்நாட்டில் 2,000க்கு கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,971 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 23 பேர் உயிரிழந்தனர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 28 2,558 பேர் குணமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுள்ளது.


  • 18:43 (IST) 19 Jul 2021
    பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது செங்கல்பட்டு நீதிமன்றம்

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்துள்ளது செங்கல்பட்டு நீதிமன்றம்.


  • 17:51 (IST) 19 Jul 2021
    பொன்னியின் செல்வன் டைட்டில் போஸ்டர் வெளியீடு

    மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருவதாக அறிவிக்கும் படத்தின் முதல் பாகத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


  • 17:49 (IST) 19 Jul 2021
    அதிமுக நிர்வாகிகளின் நியமனத்தை கேள்வி கேட்க முடியாது - ஈபிஎஸ் மனு

    அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  • 17:48 (IST) 19 Jul 2021
    அதிமுக நிர்வாகிகளின் நியமனத்தை கேள்வி கேட்க முடியாது - ஈபிஎஸ் மனு

    அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  • 17:26 (IST) 19 Jul 2021
    அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு கொரோனா

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.


  • 17:25 (IST) 19 Jul 2021
    தனியாருக்கு தடுப்பூசி விற்பது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் கருத்து

    கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், மத்திய அரசு கொடுக்கும் கொரோனா தடுப்பூசிகளை தனியாருக்கு விற்பதாக தகவல் கிடைத்துள்ளது. தனியாருக்கு தடுப்பூசி விற்கப்படுவது குறித்து மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.


  • 17:19 (IST) 19 Jul 2021
    சென்னை - பெங்களூரு விரைவு சாலை திட்டம் : மத்திய அரசுக்கு உததரவு

    சென்னை - பெங்களூரு விரைவு சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு தடை கோரிய வழக்கில், மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 16:57 (IST) 19 Jul 2021
    பாலியல் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்தன் என்பவருக்கு 32 ஆண்டு சிறை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது.


  • 16:31 (IST) 19 Jul 2021
    எம்எல்ஏக்கள் வெற்றியை எதிர்த்து வழக்கு

    தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், புதுச்சேரி நிரவி - டி.ஆர்.பட்டினம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் என்.மனோகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


  • 16:28 (IST) 19 Jul 2021
    முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

    இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.


  • 16:28 (IST) 19 Jul 2021
    இந்திய பஙகுச்சந்தை வீழ்ச்சி

    பங்குச்சந்தையில, சென்செக்ஸ் 586.66 புள்ளிகள் சரிந்து 52,553.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்ற நிலையில், நிஃப்டி 171 புள்ளிகள் சரிந்து 15,752.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.


  • 16:26 (IST) 19 Jul 2021
    'பெகாசஸ் திட்டம்' : இந்தியாவில் சட்டவிரோத கண்காணிப்பு சாத்தியமில்லை

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இந்த கூட்டத்தில், 'பெகாசஸ் திட்டம்' குறித்து மேலும் பேசிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வசிஹ்னா, 'இந்திய தந்தி சட்டம், 1885 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 இன் பிரிவு 5 (2) இன் விதிகளின் கீழ் மின்னணு தகவல்தொடர்புக்கு சட்டபூர்வமான குறுக்கீடு தொடர்பான ஒவ்வொரு வழக்குகளும் தகுதிவாய்ந்த அதிகாரத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன.

    சட்டங்கள் மற்றும் வலுவான நிறுவனங்களில் காசோலைகள் மற்றும் நிலுவைகளுடன் எந்தவொரு சட்டவிரோத கண்காணிப்பும் சாத்தியமில்லை. இந்தியாவில், நன்கு நிறுவப்பட்ட நடைமுறை உள்ளது, இதன் மூலம் மின்னணு தகவல்தொடர்புக்கு சட்டபூர்வமான குறுக்கீடு தேசிய பாதுகாப்பின் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.


  • 16:18 (IST) 19 Jul 2021
    மக்களவை ஒத்திவைப்பு

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 15:58 (IST) 19 Jul 2021
    இந்தியாவில் உளவுபார்த்தல் சாத்தியமில்லை - மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர்

    இந்தியாவில் சட்டவிரோத உளவுபார்த்தல் சாத்தியமில்லை. இந்தியாவில் அங்கீகாரமற்ற கண்காணிப்பு ஒருபோதும் நடைபெறாது என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


  • 15:03 (IST) 19 Jul 2021
    ஹெச்.ராஜா முன்ஜாமின் மனு தள்ளுபடி

    நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜா தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை ஹெச்.ராஜா அவதூறாக பேசியுள்ளார் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.


  • 14:37 (IST) 19 Jul 2021
    ஐஐடியில் சாதி மற்றும் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை - தர்மேந்திர பிரதான்

    சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சாதி மற்றும் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என திமுக மக்களவை குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.


  • 14:28 (IST) 19 Jul 2021
    எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

    மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை 3 மணி வரையும், மக்களவை 3:30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 14:28 (IST) 19 Jul 2021
    எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

    மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை 3 மணி வரையும், மக்களவை 3:30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 14:21 (IST) 19 Jul 2021
    மும்மொழிக் கொள்கை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு உட்பட்டது - தர்மேந்திர பிரதான்

    எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். மேலும் மும்மொழிக் கொள்கை மாநில அரசுகள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


  • 14:17 (IST) 19 Jul 2021
    மும்மொழிக் கொள்கை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு உட்பட்டது - தர்மேந்திர பிரதான்

    எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். மேலும் மும்மொழிக் கொள்கை மாநில அரசுகள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


  • 13:51 (IST) 19 Jul 2021
    நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 23ம் தேதி வரை தென்மேற்கு பருவ காற்று காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.


  • 13:49 (IST) 19 Jul 2021
    7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை

    7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்


  • 13:25 (IST) 19 Jul 2021
    சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க அழைப்பு

    தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.


  • 13:15 (IST) 19 Jul 2021
    வேலுமணிக்கு எதிரான வழக்கு - விசாரணை ஆகஸ்ட் 2-ம் வாரத்திற்கு ஒத்திவைப்பு

    முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வேலுமணிக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கை ஆகஸ்ட் 2-ம் வாரத்துக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். விசாரணைக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.


  • 13:12 (IST) 19 Jul 2021
    சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க அழைப்பு

    தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.


  • 12:59 (IST) 19 Jul 2021
    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69% இட ஒதுக்கீடு?

    தமிழகத்தில், மருத்துவ படிப்பில் சேர, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69% இட ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த இயலுமா என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 12:43 (IST) 19 Jul 2021
    ஜாமியாவில் டேனிஷ் உடல் நல்லடக்கம்

    ஆப்கானில் தாலிபன் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராய்ட்டஸ் செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கின் உடல் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் நல்லடக்கம் அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


  • 12:40 (IST) 19 Jul 2021
    ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான வழக்கு ரத்து

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.


  • 12:35 (IST) 19 Jul 2021
    இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் விஜய் வசந்த்

    கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட விஜயகுமார் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

    கன்னியாகுமரி மக்கள் பிரதிநிதியாக இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டேன். தந்தையின் ஆசி, குமரி மக்களின் நம்பிக்கையும், ஆதரவும் உங்கள் அனைவரது அன்பும் வாழ்த்துக்களும் என்றும் எனது மக்கள் பணிக்கு ஊக்கமளிக்கும். pic.twitter.com/1Siev1OxxU
    — VijayVasanth (@iamvijayvasanth) July 19, 2021

  • 12:29 (IST) 19 Jul 2021
    டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதல்வர்

    டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தற்போது முதன்முறையாக குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் முக ஸ்டாலின்


  • 12:28 (IST) 19 Jul 2021
    கல்லூரிகளில் சேர எப்போது விண்ணப்பிக்கலாம்?

    ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.


  • 12:26 (IST) 19 Jul 2021
    டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதல்வர்

    டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தற்போது முதன்முறையாக குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் முக ஸ்டாலின்


  • 12:18 (IST) 19 Jul 2021
    +2 மாணவர்கள் மதிப்பெண்கள் விவரம்

    அறிவியல் பாடப்பிரிவில் 30,599 மாணவர்கள் 551 முதல் 600க்குள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதே போன்று வணிக பாடப்பிரிவில் 8909 மாணவர்கள் 551 முதல் 600க்குள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 136 மாணவர்கள் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 551 முதல் 600க்குள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 35 மாணவர்கள் கலைப் பாடப்பிரிவில் 551 முதல் 600க்குள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


  • 12:14 (IST) 19 Jul 2021
    மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

    எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கத்தின் காரணமாக மக்களவை இன்று மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


  • 11:37 (IST) 19 Jul 2021
    புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

    மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


  • 11:30 (IST) 19 Jul 2021
    12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியீடு

    தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.


  • 11:24 (IST) 19 Jul 2021
    நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி

    பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். கொரோனா காலத்தில் தேவையான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதிலளிக்கவும் அரசு தயாராக உள்ளது என கூறினார்.


  • 11:24 (IST) 19 Jul 2021
    ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கம் தேவை - சுப்ரமணியன் சுவாமி

    தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

    இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி கூற வேண்டும் எனவும் ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கினால் தான் நல்லது இல்லாவிடில் அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல்போல் தலைவலிதான் என பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


  • 11:24 (IST) 19 Jul 2021
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.36,368க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 11:23 (IST) 19 Jul 2021
    சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய வலியுறுத்தல்

    தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஆவண செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.


  • 09:41 (IST) 19 Jul 2021
    மேகதாது விவகாரம் -மாநிலங்களவையில் திமுக நோட்டீஸ்

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ்


  • 09:23 (IST) 19 Jul 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 38,164 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 38,164 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 499 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து ஒரே நாளில் 38,660 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


Tamilnadu Live News Udpate Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment