பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணையம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 365 நாட்களாக இந்தியாவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலை இன்றும் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு விபரம்
புழல் ஏரியில் நீர் இருப்பு 2353 மில்லியன் கனஅடி :159 கனஅடி நீர் வெளியேற்றம்.
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 727 மில்லியன் கனஅடி
கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 463 மில்லியன் கனஅடி
ப்ளே அப் வாய்ப்பை இழந்த பெங்களூரு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குஜராத் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், மும்பை அணி ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
3வது ஒத்துழைப்பு உச்சி மாநாடு
இந்தியா, பசிபிக் தீவுகள் இடையே நடைபெறும் 3வது ஒத்துழைப்பு உச்சி மாநாடு பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் தொடர்ந்து நீடிப்பார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது
7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சரத்பாபு மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருங்கிய நண்பர் மற்றும் அருமையான நண்பர் சரத்பாபுவை இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு, அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2,99,558 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வரும் 29ம் தேதி அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் உயிரிழப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இ.பி.எஸ் அறிவித்துள்ளார்
நடிகர் சரத்பாபு மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பல மொழிகளில் பிரபலமான படைப்புகளுக்கு சரத்பாபு நினைவு கூறப்படுவார் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்
மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது. தமிழ் திரையுலகினர், பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படுகிறது. சரத்பாபுவின் உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. சரத்பாபுவின் உடல் சென்னையில் தகனம் செய்யப்படுகிறது
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 5,500 அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
நடிகர் சரத்பாபுவின் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான படங்களில் அவர் நடித்த திரைப்படங்கள் என்றென்றும் நினைவு கூரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார்.
தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பேருந்தில் ரூ.2,000 நோட்டுகளை நடத்துனர்கள் பெறக்கூடாது என்ற சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது
மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விவகாரத்தில் உயிரிழந்த நபர்களுக்கு ரூ.10 லட்சம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சரத் பாபுவின் மறைவுக்கு நடிகை குஷ்பூ இரங்கல் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “ஒரு அற்புதமான நடிகரை மட்டுமல்ல ஒரு அற்புதமான மனிதரையும் இழந்துவிட்டோம். எல்லோருக்கும் அவரைப் பற்றிய இனிமையான நினைவுகள் மட்டுமே இருக்கும்.
அவரது புன்னகை, ஆறுதல் வார்த்தைகள், அனைத்தையும் தவறவிடுவார்கள். நான் அவரை எப்போதும் ‘என் பெரிய சகோதரன்’ என்றுதான் அழைப்பேன். நீங்கள் இறுதியாக நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், இனி வலி இல்லை. நன்றாக ஓய்வெடுங்கள் சகோதரா” எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வீடுகளுக்கு தீவைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசு ஊரடங்கு தளர்வு உத்தரவு நேரத்தை இப்போது காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை குறைத்துள்ளது. முன்னதாக, ஊரடங்கு தளர்வு உத்தரவு காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் திங்கள்கிழமை இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஒரு கும்பல் வீடுகளுக்கு தீ வைத்ததை அடுத்து பதற்றம் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் விரைந்துள்ளனர்.
தீவைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசு ஊரடங்கு தளர்வு உத்தரவை இப்போது காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை என குறைத்துள்ளது. முன்னதாக, ஊரடங்கு தளர்வு உத்தரவு காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை என தளர்த்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து வீடுகள் மற்றும் வளாகங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் பற்றிய செய்திகளை மேற்கோள் காட்டி இணைய சேவைகளுக்கான தடையை அதிகாரிகள் மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்தனர்.
“மணிப்பூர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் படங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு வீடியோ செய்திகளை பரப்புவதற்கு சமூக விரோதிகள் சமூக ஊடகங்களை பரவலாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது” இணைய சேவை தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பழங்குடி மாணவர்களுக்கான மத்திய அரசின் ஏகலைவா பள்ளியில் பயின்று சாதித்த தமிழக பழங்குடி மாணவர்கள். இதே போல, கிராமப்புற மாணவர்கள் சாதனை செய்ய உதவும் நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசு தடுப்பது முறையா? என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
நடிகர் சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ட்வீட் செய்துள்ளார். அதில், “பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்தித்து வருகிறார்.
நடிகர் சரத்பாபு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்; காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது; அவருக்கு என் அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என்…
— Kamal Haasan (@ikamalhaasan) May 22, 2023
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்க நாளை (மே 23) முதல் 8 நாள் சுற்றுப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார். டோக்கியோ நகரில் 200-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டை வஉசி மைதானத்தின் பார்வையாளர் அரங்கு நிழல் குடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திடீரென காற்றுடன் பெய்த கனமழையால் மைதான பார்வையாளர் நிழல் குடை சேதம் அடைந்தது. விபத்து நடந்த வ.உ.சி மைதானத்தை மூட மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
ஐ.பி.எல் பிளேஆஃப் போட்டிகளை முன்னிட்டு, சென்னையில் மே 23, 24 தேதிகளில், மெட்ரோ ரயில்கள் இரவு 1 மணி வரை இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இ.பி.எஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இ.பி.எஸ் முருகன் உள்ளிட்ட 30 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு காலமானார்.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு; 1 – 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ல் பள்ளிகள் திறக்கப்படும்- கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின், ஈபிஎஸ் பேட்டி
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விஷச்சாராய மரணம் ,சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக அவரிடம் மனு அளித்தார்.
தமிழகம், புதுச்சேரியில் வரும் 26ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற எஸ்.பி.ஐ அறிவிப்புக்கு எதிராக மனு
டெல்லி உயர்நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் ரிட் மனு தாக்கல்
அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும்
கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக சார்பில் பேரணி
காவல் துறையின் தடுப்பு வேலிகளை மீறி அதிமுகவினர் பேரணி செல்ல முயன்றதால் பரபரப்பு
போலீசார் – அதிமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு
கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3 தொடங்கி, 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 வரை நடைபெறுகிறது
அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம்
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வசதி, நிழலில் காத்திருக்கும் வசதிகளை வழங்க வேண்டும்
ரூ.2000 நோட்டுகள் குறித்த அன்றாட தரவுகளை பராமரிப்பதோடு, கேட்கும் போது விவரங்களை வழங்க வேண்டும்”
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு முதற்கட்டமாக ரூ.3 கோடி நிதியுதவி
அமைச்சர் உதயநிதியிடம் காசோலையை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக சார்பில் சற்று நேரத்தில் பேரணி
சின்னமலையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி
தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் பணியிடை நீக்கம்
டாஸ்மாக் பாரின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
ஏற்கனவே உரிமையாளர் உள்பட இருவர் கைதான நிலையில், ஊழியர்கள் சஸ்பெண்ட்
தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் டாஸ்மாக் பாரின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம். ஏற்கனவே உரிமையாளர் உள்பட இருவர் கைதான நிலையில், ஊழியர்கள் சஸ்பெண்ட்
அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மருத்துவ கல்லூரி அமைக்க முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதேபோல் சொத்துக்குவிப்பு வழங்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட் உள்ளது.
மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக சங்கீதா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு ஆட்சியராக இருந்த அனீஷ் சேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பதவியேற்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,675-க்கும், சவரன் 45,400 ரூபாய்க்கும் விற்பனை
தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனக்கு அளிக்கப்படும் ஜீரோ டிராபிக் சலுகையை ரத்து செய்யுமாறு போக்குவரத்து போலீசாருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலையோரம் இருந்த பழமையான மரம் திடீரென விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு; மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்!
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் சிம்புவின் 48வது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்குகிறது; இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்!
விஷச்சாராய மரணம் தொடர்பாக சென்னை, ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக சார்பில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்று ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் Swiggy மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்த பிறகு, முதன் முதலாக இன்று சட்டப்பேரவை கூடுகிறது * புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக் கொள்கின்றனர்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக தான் மாநில தலைவரானேன். திறமையான தலைவர்களை வெற்றி பெறச்செய்வதே எனது வேலை. அதேபோல் 2024 தேர்தலில் தொண்டனாக இருந்து வேலை செய்வேன். டெல்லி செல்ல எனக்கு விருப்பமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஜப்பானின் ஓசாகா திரைப்பட விழாவில் மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய்-க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிப்பு