/indian-express-tamil/media/media_files/2025/08/05/tvk-head-vijay-2025-08-05-10-26-58.jpg)
Today Latest Live News Update in Tamil 05 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு: ஜி.டி.ஆர்.ஐ விளக்கம்
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா, பெரிய லாபத்திற்கு விற்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டிய நிலையில், அது முற்றிலும் தவறானது என சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ (GTRI) விளக்கம் அளித்துள்ளது. மேலும்,ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்
வாங்குவதை நிறுத்தினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Aug 05, 2025 10:27 IST
பறக்கும் ரயில் நவம்பரில் தொடக்கம்
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் தொடக்க உள்ளதாகவும், சென்னை கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் 2028ம் ஆண்டு இறுதியில்
மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. -
Aug 05, 2025 10:24 IST
ஆக.21-ம் தேதி மாநாட்டை நடத்த த.வெ.க முடிவு
தவெக மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிருந்த நிலையில் தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்தியது. காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று, வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்த தவெக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 05, 2025 09:42 IST
அஜித் குறித்து ஷாலினி நெகிழ்ச்சி பதிவு
நடிகர் அஜித்குமாரின் 33 ஆண்டுகள் வெற்றிகரமான திரைப்பயணம் என ஷாலினி அஜித் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது, நீங்கள் மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளீர்கள், இதையெல்லாம் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
-
Aug 05, 2025 08:47 IST
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கடலூர், மயிலாடுதுறை, நாகை,கன்னியாகுமரியில் காலை 10 மணி வரை
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக,வானிலை மையம் தெரிவித்துள்ளது. -
Aug 05, 2025 08:15 IST
இந்தியாவை குறி வைப்பது நியாயமற்றது: வெளியுறவுத்துறை விளக்கம்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்படுவது நியாயமற்றது. இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிசக்தி பொருட்களை வழங்குவதற்காகவே ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
Aug 05, 2025 08:14 IST
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரட்டை நிலைப்பாடு: இந்திய வெளியுறவுத்துறை
2024 ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் இந்தியாவை விடவும் அதிகம். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருவதை சுட்டிக்காட்டி, "இரட்டை நிலைப்பாடு"
என இந்திய வெளியுறவுத்துறை விமர்சித்துள்ளது. -
Aug 05, 2025 08:13 IST
அமெரிக்காவின் வரிவிதிப்பு - ரஷ்யா கடும் பதிலடி
அமெரிக்காவின் சட்டவிரோத ஒருதலைபட்சமான வரிகளை ரஷ்யா எப்போதும் எதிர்த்து நிற்கும் என ரஷ்ய வெளியுறவுத்துறை பதிலடி தந்துள்ளது. புதிய காலனித்துவம் மூலம் உலகத்தை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் போக்கை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது,
-
Aug 05, 2025 08:12 IST
3 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
நாமக்கல், ராசிபுரம் அருகே கடன் தொல்லையால், 3 பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கோவிந்தராஜ் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகவும், கடனை செலுத்த முடியாததால் விபரீத முடிவு எடுத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Aug 05, 2025 08:09 IST
கனடாவில் 51 அடி உயர ராமர் சிலை திறப்பு
கனடாவின் டொராண்டோவில் 51 அடி உயர ராமர் சிலை திறப்பு, விழாவில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.