Chennai News Updates: டிரம்ப்பின் 50% வரி உயர்வு: வர்த்தக ரீதியிலான மிரட்டல் - ராகுல் காந்தி

Tamil Nadu News Updates: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Updates: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahul gandhi

Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 06, 2025 22:00 IST

    அஜித்குமாரின் ரேஸிக் நிறுவனத்தில் இணைந்த நரேன் கார்த்திகேயன்

    அஜித்குமாரின் ரேஸிக் நிறுவனத்தில் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் இணைந்துள்ளார். நரேன் கார்த்திகேயன் எங்கள் அணியில் இணைந்தது பெருமை அளிக்கிறது என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.



  • Aug 06, 2025 21:42 IST

    டிரம்ப்பின் 50% வரி உயர்வு: வர்த்தக ரீதியிலான மிரட்டல் - ராகுல் காந்தி

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: “டிரம்பின் 50% வரி என்பது வர்த்தக ரீதியிலான மிரட்டல். நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியாவை இழுக்கும் முயற்சி. மோடியின் பலவீனம், இந்தியர்களின் நலன்களை மேலோங்கி சென்றுவிடக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.



  • Advertisment
  • Aug 06, 2025 21:26 IST

    45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு ரோந்து பணியில் இருந்து விலக்கு - சென்னை காவல் ஆணையர் உத்தரவு

    45 வயதுக்கு மேல் உள்ள பெண் காவலர்களுக்கு ரோந்து பணியில் இருந்து விலக்கு அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளார். பெண் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு ரோந்து பணியில் விலக்கு அளிக்கவும் ரோந்து பணியிலிருந்து பெண் காவல்துறையினர் விலக்கு கேட்டால் அனுமதி  வழங்கவும் சென்னை மாநகர காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளார்.



  • Aug 06, 2025 21:17 IST

    இந்தியாவுக்கு 50% வரி: அமெரிக்காவின் முடிவு துரதிர்ஷ்டவசமானது - ரன்தீர் ஜெய்ஸ்வால்

    இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்: “எண்ணற்ற நாடுகள், தங்கள் நாட்டின் நலனுக்காக செய்வதையே இந்தியாவும் செய்தது. இருந்தபோதிலும் இந்தியா மீது கூடுதல் வரியை விதிப்பதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கைள் முழுக்க முழுக்க நியாயமற்றை. இந்தியா மீது விதித்துள்ள 50% வரி நியாமற்றைவை. தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும்.” என்று கூறினார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 06, 2025 20:04 IST

    மக்களுக்காக நீங்கள் எத்தனை போராட்டம் நடத்தியுள்ளீர்கள்? இ.பி.எஸ்-க்கு பெ.சண்முகம் கேள்வி

    சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இ.டி மற்றும் ஐ.டி சோதனைகளுக்கு பயந்து பா.ஜ.க.வுடன் நட்பு வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, எங்களைப் பார்த்து சீட்டுக்காக பயந்து போய் போராடவில்லை எனக் கூறுகிறாரே. மக்களுக்காக நீங்கள் எத்தனை போராட்டத்தை இதுவரை நடத்தியுள்ளீர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Aug 06, 2025 19:50 IST

    இந்தியாவுக்கு மேலும் 25% வரி -  அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

    இந்தியாவுக்கு மேலும் 25% வரி -  அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே 25% வரி விதிக்கப்பட்டநிலையில் தற்போது மேலும், 25% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த டிரம்ப் கெடு விதித்திருந்தார்.



  • Aug 06, 2025 19:16 IST

    சி.வி.சண்முகத்துக்கு அரசியல் தெளிவு பிறந்திருக்கும் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா காட்டம்

    அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: “அ.தி.மு.க எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு அரசியல் தெளிவு பிறந்திருக்கும். ஆனால், ஜெயலலிதா பெயருடன் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்; அதையும் குறை சொல்கிறார்களா? ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவருக்கு துரோகம் செய்கிற கூட்டமாகத்தான் அந்தக் கூடாரம் உள்ளது.” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.



  • Aug 06, 2025 18:45 IST

    தந்தை – மகன் மோதல்; தங்கர்பச்சான் பரபரப்பு பதிவு

    நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் எனும் பெருந்தன்மை இப்பொழுது புரியாமல் போகலாம்! என இயக்குனர் தங்கர் பச்சான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்



  • Aug 06, 2025 17:55 IST

    சென்னையில் 45+ வயதுள்ள காவலர்களுக்கு இரவு பணி இல்லை

    சென்னை மாநகரில் பெண் காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ., காவலர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இரவு நேர ரோந்துப் பணியில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Aug 06, 2025 17:34 IST

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - மோடி சீனாவுக்கு பயணம்

    பிரதமர் மோடி 31-ந்தேதி சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2019-ம் ஆண்டுக்கு பின்னர் சீனாவுக்கு பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும். இதன்படி, சீனாவின் டியான்ஜின் நகருக்கு சென்று சேரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதன்பின்னர் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்படர் 1 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்னர், அவர் ஜப்பான் நாட்டுக்கு ஆகஸ்டு 30-ந்தேதி பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா உடன் இணைந்து, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.



  • Aug 06, 2025 17:11 IST

    சென்னை: 6 வார்டுகளில் நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (07.08.2025) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-42, வார்டு-51, வார்டு-73, வார்டு-120, வார்டு-172, வார்டு-200, செம்மஞ்சேரி, பழத்தோட்ட சாலையில் உள்ள மாநகராட்சி சமூகநல கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.



  • Aug 06, 2025 16:56 IST

    7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 06, 2025 16:31 IST

    பா.ம.க. பொதுக்குழு- அன்புமணிக்கு எதிராக வழக்கு

    பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ராமதாஸ் நியமித்த பா.ம.க. மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னைத்தானே தலைவர் எனச் சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், மாமல்லபுரத்தில் 9ம் தேதி நடக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். முரளிசங்கர் தொடர்ந்த வழக்கு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.



  • Aug 06, 2025 16:13 IST

    இந்தியாவில் ஒரே நாளில் ரூ.70.70 கோடி யுபிஐ பரிவர்த்தனை

    இந்தியாவில் ஒரே நாளில் ரூ.70.70 கோடி பணப்பரிவர்த்தனை நடந்து யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த 2ம் தேதி ஒரே நாளில் ரூ.70.70 கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல் சாதனையை எட்டி உள்ளது. 2023ம் ஆண்டு உடன் ஒப்பிடும் போது, தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.



  • Aug 06, 2025 15:49 IST

    கோவை உள்பட 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 3. ராயலசீமா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கோவை உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.



  • Aug 06, 2025 15:45 IST

    மெரினா கடற்கரை சாலையில் திருநங்கைகள் சாலை மறியல்

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்ணகி நகர் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிராக மறியல் போராட்டம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.



  • Aug 06, 2025 15:37 IST

    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - பிரேமலதா

    எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும், விஜயகாந்த் புகைப்படத்தையோ, வசனங்களையோ பயன்படுத்த கூடாது. கூட்டணிக்கு வரும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் புகைப்படம், பெயரை பயன்படுத்தலாம் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்



  • Aug 06, 2025 15:36 IST

    மன்னிப்பு கேட்ட கிங்டம் படக்குழு

    கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கேள்விப்பட்டோம். மக்களின் உணர்வுகளை கிங்டம் திரைப்படம் புண்படுத்தியிருந்தால் மிகவும் வருந்துகிறோம் என கிங்டம் படக்குழு தெரிவித்துள்ளது



  • Aug 06, 2025 15:05 IST

    இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் - தமிழக அரசு அரசாணை

    இணையம் சார்ந்த 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி இணையம் சார்ந்த ஊழியர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு திட்டத்துக்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.



  • Aug 06, 2025 15:02 IST

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, தென் இந்திய பகுதி மற்றும் ராயலசீமா,அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 8-ஆம் தேதி வரை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 06, 2025 15:00 IST

    அண்ணாமலை தவறான தகவலை கூறுகிறார்: அமைச்சர் பெரியகருப்பன்

    ஜல் ஜீவன் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என அண்ணாமலை தவறான தகவலை கூறுகிறார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சந்தேகம் இருந்தால் அண்ணாமலை நேரில் வந்து ஆய்வு செய்யட்டும். அண்ணாமலையின் அறிக்கை மக்களிடையே பீதியை கிளப்புவதாக உள்ளது என அவர் கூறினார்.



  • Aug 06, 2025 14:55 IST

    கலைஞர் மீது ஆளுநருக்கு என்ன கோபம்?: சபாநாயகர் கேள்வி

    கலைஞர் மீது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். கலைஞர் பெயரில் ஒரு பல்கலை. அமைப்பதை கூட அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.



  • Aug 06, 2025 14:47 IST

    சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார்

    சென்னை அண்ணா நகரில் பள்ளியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பள்ளியில் வழக்கறிஞரின் மகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் தாக்கிய விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Aug 06, 2025 14:46 IST

    4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2017 முதல் இதுவரை குள்ளஞ்சாவடி ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகாரை முடித்து வைப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கைதர வேண்டும். புகாரை விசாரித்த குற்றப்பத்திரிகையோ, அறிக்கையோ தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.



  • Aug 06, 2025 14:26 IST

    தபால் நிலையங்களில் சேவை பாதிப்பு

    தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் புதிய தொழில்நுட்பம் மாற்றப்பட்டதால், சர்வர் கோளாறு காரணமாக பல்வேறு தபால் நிலையங்களில் சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப பிரச்சினைகள் விரைவில் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 



  • Aug 06, 2025 14:14 IST

    தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

    தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Aug 06, 2025 14:07 IST

    திராவிட மாடல் ஆட்சியின் மணிமகுடத்தில் இது ஒரு வைரக் கல் - நிதியமைச்சர்

    "பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க நிலையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் நம்முடையை சாதனையை நாம்தான் முறியடிக்க முடியும் என்ற வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் மற்றொரு மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக் கல் இது” என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 



  • Aug 06, 2025 13:50 IST

    14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

    14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நிபுணர்கள் கணித்தை விட அதிகமான அளவு பொருளாதார வளர்ச்சி பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே திமுக அரசு நிகழ்த்திய சாதனையை திமுக அரசுதான் முறியடிக்கும் என்பதை மு.க.ஸ்டாலின் அரசு நிரூபித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.



  • Aug 06, 2025 13:41 IST

    திருவள்ளூரில் ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அட்ரோஸிட்டி

    திருவள்ளூரில் ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் , ரயில் ஜன்னல் மீது ஏறி தொங்கியபடியும், கூச்சலிட்டவாறும் செல்லும் கல்லூரி மாணவர்கள். ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Aug 06, 2025 13:19 IST

    சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.3000 கோடி நிதி விடுவிப்பு - ஆர்டிஐ தகவல்

    சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 2025-26ம் ஆண்டில் ஒன்றிய அரசு ரூ.3000 கோடி நிதி விடுத்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445 கோடி நிதி ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டது. சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில், ரூ.3000 கோடி ஒதுக்கீடு என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது.. 



  • Aug 06, 2025 13:19 IST

    சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!

    முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்கமுடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • Aug 06, 2025 13:05 IST

    எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? - இ.பி.எஸ் சரமாரி கேள்வி 

    தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.

    காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்? விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?

    மு.க. ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே! ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே! மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Aug 06, 2025 13:03 IST

    இ.டி-க்கு அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் 

    ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்த நிலையில், ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல எனக் குறிப்பிட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு அபராதம் விதித்துள்ளனர். 

    மேலும், அபராதத்தை ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆக்.20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • Aug 06, 2025 13:00 IST

    மெட்ரோ ரயில் - மத்திய அரசு ரூ.3000 கோடி விடுவிப்பு

    சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 2025-26ம் ஆண்டில் மத்திய அரசு ரூ.3000 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகி இருக்கிறது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது - சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில், ரூ.3000 கோடி ஒதுக்கீடு என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 



  • Aug 06, 2025 12:59 IST

    தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் - திருமாவளவன் பேட்டி 

    சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு மேற்கொண்டனர். முதல்வர் ஸ்டாலினுடன் வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் சண்முகம், சி.பி.ஐ முத்தரசன் உள்ளிட்டோர் சந்திப்பு மேற்கொண்டனர். அவர்கள் முதலமைச்சரின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், ஆணவக்கொலைக்கு சிறப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன; தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம் என்று கூறியுள்ளார். 



  • Aug 06, 2025 12:56 IST

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உயர்வு - ஸ்டாலின் பேச்சு 

    `Talk of the Nation' - தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%ஆக உயர்ந்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது, திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் பொருளாதாரம் அதிகரிக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இறுதியாக இரட்டை இலக்கம் 11.15%ஆக இருந்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Aug 06, 2025 12:35 IST

    'தலைவன் தலைவி' ரூ.75 கோடிக்கு மேல் வசூல்!

    விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப் படம், உலகம் முழுவதும் 12 நாட்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.



  • Aug 06, 2025 12:35 IST

    நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

    ஆன்லைன் ரம்மி செயலிக்கு விளம்பரம் கொடுத்த நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத சூதாட்ட செயலியை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரத்தில் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியதை அடுத்து ஐதாராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.



  • Aug 06, 2025 12:26 IST

    ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் நாளை வெளியீடு 

    க்ரிஸ் திருகுமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Aug 06, 2025 12:25 IST

    இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் -  இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காலக்கெடு

    பீகார் வாக்காளர் இறுதி வரைவு பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்ட விவகாரத்தில், வரும் சனிக்கிழமைக்குள் பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறந்தவர்களின் விவரம், நிரந்தரமாக புலம் பெயர்ந்தவர்கள் விவரம் வழங்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Aug 06, 2025 11:17 IST

    எம்.பி சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது

    டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது  மயிலாடுதுறை எம்பி சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து செயினை மீட்டுள்ளனர் டெல்லி போலீசார். நேற்று முன் தினம் எம்,பி சுதாவின் கழுத்தில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட 4 சவரன் தங்கச் சங்கிலி தற்போது மீட்க்கப்பட்டுள்ளது 



  • Aug 06, 2025 10:51 IST

    ஆணவக் கொலைக்கு சிறப்பு சட்டம் - ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

    தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு மேற்கொண்டனர். முதல்வர் ஸ்டாலினுடன் வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் சண்முகம், சி.பி.ஐ முத்தரசன் உள்ளிட்டோர் சந்திப்பு மேற்கொண்டனர். அவர்கள் முதலமைச்சரின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், ஆணவக்கொலைக்கு சிறப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

     



  • Aug 06, 2025 09:35 IST

    அமெரிக்கா மீது இந்தியா குற்றச்சாட்டு:  அதிபர் ட்ரம்ப் பதில்.

    ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்க யுரேனியம் இறக்குமதி செய்வதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.



  • Aug 06, 2025 09:05 IST

    பாக். தாக்குதலா? - இந்திய ராணுவம் மறுப்பு

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில்,  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது,



  • Aug 06, 2025 09:03 IST

    இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு: சென்னை - திருச்சி விமானம் தாமதம்

    சென்னையிலிருந்து திருச்சிக்கு 73 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. காலை 5.45க்கு புறப்பட வேண்டிய விமானம் இயந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது



  • Aug 06, 2025 08:05 IST

    உத்தரகாசி மேகவெடிப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை

    உத்தரகாசியின் தாராலி, சுகி மலைப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு, 
    கீர் கங்கா ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, 4 பேர் பலி, பலர் மாயமாகியுள்ள நிலையில், நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்ட வீடுகள், உணவகங்கள்,  பாதிக்கப்பட்ட பகுதியில் 2-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. ஹரித்துவார், நைனிடால், உத்தம்சிங் பகுதிக்கு ரெட் அலர்ட், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 06, 2025 08:03 IST

    நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது,



  • Aug 06, 2025 08:01 IST

    கேரளாவில் கனமழை: எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் பகுதிகளில் வெள்ளம்

    கேரளாவில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.



  • Aug 06, 2025 07:32 IST

    ராமேஸ்வர மீனவர்கள் 14 பேர் கைது

    தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே  இன்று ஒரே நாளில் மட்டும் தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த நிலையில் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை அட்டூழியம் செய்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Aug 06, 2025 07:31 IST

    சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை

    திருப்பூர், உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம் என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் பிரச்னை தொடர்பாக புகார் வந்த நிலையில் விசாரிக்க சென்றபோது சண்முகசுந்தரம் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: