today weather updates : அரபிக்கடலில் புயல் உருவாகிவிட்டது. நேற்றெல்லாம் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வாயு தற்போது புயலாக மாறி உள்ளது. தென்மேற்கு பருவமழை முதலில் கேரளாவில் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கிவிட்டது.
இதையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள வாயு புயல் நாளை அல்லது நாளை மறுநாள் குஜராத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெ ரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
வாயு புயல் வடக்கு திசையில் நகர்ந்து கேரள கடலோரப் பகுதிக்கு நேற்று வந்தது. அதனால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவை ஒட்டிய தமிழக எல்லையிலும் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் வேலூர், திருத்தணி, சென்னை, ஆகிய இடங்களில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. கடலூர், மதுரை 107 டிகிரி, புதுச்சேரி, திருச்சி 104, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை 102 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், இன்றும் நாளையும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயிலுடன் கூடிய வெப்ப காற்று வீசும் என்றும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பம் குறைந்து மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மழை காரணமாக இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகளில், பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மின் தடையும் ஏற்பட்டு வருகிறது.
Cyclone Vayu today weather updates
அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயுப்புயல் அதி தீவிர புயலாக உருமாறியுள்ளது. நாளை கரையைக் கடக்கும் போது இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். மேலும் காற்றின் வேகம் 175 கி.மீ வரை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
போர் பந்தர் மற்றும் டையூக்கு இடைப்பட்ட பகுதியில் நாளை கரையைக் கடக்க உள்ளது வாயு புயல்.
மேலும் படிக்க : புதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை! காரணங்கள் என்ன?