இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரேனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஏப்.7 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டது. இதை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் முதலமைச்சர் உத்தரவுப்படி அனைத்து அமைச்சர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை கூடுகிறது. இதனையடுத்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
முன்னதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு தொற்று இருப்பது உறுதியானது. லேசான காய்ச்சல் மட்டுமே அவருக்கு இருப்பதால், மருத்துவர் அறிவுறுத்தலின்பேரில் சென்னை, அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"