New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/train-7-1-1-4.jpg)
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் மதுரை - தாம்பரம் - மதுரை வாரம் இருமுறை சேவை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வியாழன், சனிக்கிழமைகளில் மதுரையில் இருந்து புறப்படும் மதுரை - தாம்பரம் ரயிலில் (22624) மார்ச் 22 முதல் ஏப்ரல் 26 வரை கூடுதலாக 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
மறு மார்க்கத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - மதுரை ரயிலில் (22623) மார்ச் 23 முதல் ஏப்ரல் 27 வரை கூடுதலாக 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
இதன் மூலம் இந்த ரயில்கள் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஐந்து குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஆகியவற்றுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.