scorecardresearch

ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் என்ற செய்தி போலியானது;  போக்குவரத்துத் துறை

ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை விளக்கம்

ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் என்ற செய்தி போலியானது;  போக்குவரத்துத் துறை
ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை விளக்கம்

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தவறாக வந்த செய்திக்கு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: 60 வயது யானைக்கு பிரிவு உபச்சார விழா: வனத்துறையினர் கொடுத்த ஸ்பெஷல் மரியாதை

இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. மேற்கண்டவாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu transport department clarifies rs 1000 for drivers is fake news

Best of Express