/indian-express-tamil/media/media_files/2024/12/23/eVbDrgC79hrb7IQ26RR3.jpg)
அரசு பேருந்துகளை இயக்கும் போது செல்போன் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அரசு பேருந்து ஓட்டுநர், செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, பேருந்தை ஓட்டிச் சென்றவர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்தது.
அவர், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றபோது செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியது கண்டறியப்பட்டது. அதன்பேரில், கனகராஜ் மீது நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாள்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். தொடர்ந்து செல்போனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு, போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.