Advertisment

அரசு பஸ்களில் கட்டணம் இல்லாமல் நிவாரண பொருட்கள்: நெல்லை, தூத்துக்குடிக்கு சலுகை

திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நிவாரண பொருட்கள் வழங்க கட்டணம் இல்லை என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TN South IETamil

தென் மாவட்ட வெள்ள பாதிப்பு

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பல பகுதகளில் வெள்ளம் சூழ்ந்தள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அரசு பேருந்தில் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த வாரத்தில் சென்னையில் பெய்த கனமழையால், பல பகுதிகளில் நீரில் மூழ்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதில் குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் அதிகனமழை காரணமாக, தூத்தக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு படைகள் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேரு உயிரிழந்துள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே பல இடங்களில் மழை வெள்ளத்தின பாதிப்பு காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளதால், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தாமதமாகி வரும் நிலையில், பல தடைகளை கடந்து மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளதாவல், மீட்பு பணிகள் தீவரமாகி வருகிறது.

இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கட்டணமின்றி அரசு பேருந்துகளில் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கட்டணமின்றி நிவாரண பொருட்களை அனுப்பலாம். இப்படி அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் இதர பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், திருச்செந்தூர் கோவிலில் பொதுமக்கள் பலரும் தஞ்சமடைந்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களும் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் 3 நாட்களும் உணவு அளிக்கப்பட்டது. இதனிடையே திருச்செந்தூர் கோவில் மற்றும் இதர பகுதிகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக அரசின் சார்பில் சிறப்பு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூரில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், மதுரை திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இந்த பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு திருச்செந்தூர் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu flood relief
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment