திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்பதிவு செய்தவர்களுக்கு முறையாக பேருந்து இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/19/siv.jpg)
தொடர்நது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கடந்த ஆண்டு முன்பதிவு செய்து பொங்கல் விடுமுறைக்காக பயணம் செய்தவர்கள் மொத்தமே 3 லட்சம் பேர்தான். இந்தாண்டு ஒரு வழியில் முன்பதிவு செய்து சென்றவர்களின் எண்ணிக்கை 3.20 லட்சம் எட்டியுள்ளது.
மீண்டும் திரும்பி செல்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 5 லட்சம் பயணிகளுக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம். பயணிகள் வருகைக்கு ஏற்ப தேவையான அளவிற்கு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர். கடந்தாண்டு சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டு 4 நாட்களில் மட்டும் 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/19/siha.jpg)
ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளை நம்பி மக்கள் அதிகம் வருகிறார்கள் என்பதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. அதேபோல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“