scorecardresearch

பெல் தொழிற்சங்க தேர்தல்: அ.தி.மு.க-வை வீழ்த்திய தி.மு.க

திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளது.

பெல் தொழிற்சங்க தேர்தல்: அ.தி.மு.க-வை வீழ்த்திய தி.மு.க

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில்  தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தலில் தொமுச 2 உறுப்பினர்களை பெற்று மீண்டும் முதன்மை சங்கமாக தேர்வு பெற்றுள்ளது. 

 திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளது. இதில் தொழிலாளர்களின் பிரச்சனைகள், சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றை பெல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தருவதற்கான அதிகாரம் கொண்ட சங்க உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா  காரணமாக இரண்டு ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை. தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், தொழிலாளர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடந்தது. மொத்தம் 4 ஆயிரத்து 565 வாக்காளர்கள்(தொழிலாளர்கள் மட்டும்)  உள்ள இந்த தேர்தலில் 4488 வாக்குகள் (98.3 சதவீதம்)பதிவானது.

இதில்  10% வாக்குகள் பெரும் சங்கங்கள் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில்  தொமுச, ஏடிபி, ஐஎன்டியூசி, டிடிஎஸ் மற்றும் ஏஐடியூசி, அம்பேத்கர் யூனியன், பிஎம்எஸ், சிஐடியு, எல்எல்எப், என்டிஎல்எப்  என 9 சங்கங்கள் போட்டியிட்டன.  இதில்  தொமுச 938(திமுக)  வாக்குகள் பெற்று இரண்டு உறுப்பினர்களுடன் மீண்டும் முதன்மை சங்கமாக தேர்வு பெற்று உள்ளது.

ஏடிபி 738 (அதிமுக)வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஐ என் டி யுசி 579(காங்கிரஸ்) வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், பிஎம்எஸ் 571(பாஜக) வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும், சிஐடியு(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)  568 வாக்குகள் பெற்று 5-ம் இடத்தையும் பெற்று  தலா ஒரு உறுப்பினர்களை பெற்றுள்ளது.

இதில் அதிக வாக்குகள் பெற்று அதிக உறுப்பினர்களை கொண்ட  முதன்மை சங்கமாக திமுக தொழிற்சங்கமான தொமுச தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் இருந்த அதிமுக ஏடிபி  தொழிற்சங்கம் தற்பொழுது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

 இந்தத் தேர்தலில் திமுகவா  அதிமுகவா  என்ற  பலப்பரிட்சையில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தொமுசவுக்காக அமைச்சர்கள் அன்பில் கே என் நேரு, ஆங்கில் மகேஷ் பொய்யாமொழியும் தீவிர பணியாற்றினர்  என்பதும் அதிமுகவுக்கு முன்னாள் எம்பியும் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான  ப. குமாரும் செயலாற்றியது  குறிப்பிடத்தக்கது.

க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu trichy bhel employee election dmk beat aiadmk

Best of Express