திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மிதமான தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தனியார் பள்ளி மாணவர்கள் 10 பேர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றதில் மூன்று மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு முடிந்து கடைசி தின விடுமுறை இன்று விடப்பட்டுள்ளது. இதில் திருச்சி சிந்தாமணி அய்யாளம்மன் கோயில் படித்துறை பகுதி காவிரி ஆற்றில் தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் சிலர் குளிக்க சென்றனர். இதில் 3 மாணவர்கள், ஆற்றில் மூழ்கியுள்ளனர். இது குறித்து போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை மூழ்கிய மூன்று மாணவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. மேலும், மீட்பு பணியின்போது தீயணைப்பு வீரர்கள் சென்ற அந்த பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் போலீசார் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மூழ்கிய மாணவர்களில் விக்னேஷ், ஜாகிர் உசேன், சிம்பு ஆகியோர் திருச்சி மாநகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முக்கியமானவர்களின் பெற்றோர்கள் கதறும் காட்சி கண்கலங்க வைக்கிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“