விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் மரணம்; உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் போராட்டம்

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலாளர்களாக பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013, பிரிவுகள் 7, 9 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலாளர்களாக பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013, பிரிவுகள் 7, 9 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy Cleanig

திருச்சி மாநகராட்சி  40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த  பணியாளர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (32) என்பவர் இறக்கியவர் ஓரு மணிநேரத்திற்கு மேல் காணாத நிலையில், புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த ரவி (38) என்பவர் பிரபுவை இறங்கி தேட சொல்லி தனியார் நிறுவன ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் நிர்பந்தித்ததன் விளைவாக பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இரு நபர்களும் விஷவாயு தாக்கி குழிக்குள்ளேயே உயிரிழந்தனர்.

Advertisment

பின்னர், தீயணைப்புத் துறையினரால் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து, துப்புரவுத் தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சிஐடியு, தீண்டாமை ஓழிப்பு முன்னணி, வாலிபர், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு அக்கட்சியினர் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலாளர்களாக பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013, பிரிவுகள் 7, 9 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் இன்று திருச்சி கோட்டாசியர் அருள் தலைமையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர், போலீஸார், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் கலந்துகொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் வேண்டுகோள் வைத்தனர். இதில், உடன்பாடு ஏற்பட்டது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது.

பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயலாளர்கள் வெற்றிசெல்வம், சிவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், நடராஜன், கார்த்திகேயன், ரஜினிகாந்த், சிஐடியு மாவட்ட தலைவர் மணிமாறன் , பொருளாளர் மணிகண்டன், தீண்டாமை ஓழிப்பு முன்னணி  மாவட்ட தலைவர் கனல்கண்ணன், திருவெறும்பூர் ஓன்றிய செயலாளர்கள் ரவி, குருநாதன், வாலிபர் சங்க நிர்வாகிகள் சேதுபதி, சந்தோஷ்,ரவி, காட்டூர் பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜாகீர், நவநீத கிருஷ்ணன், செந்தில், நல்லையன் உள்ளிட்ட தோழர்கள் 20 மணிநேரம்  தொடர் போரட்டத்திற்கு பிறகு இருவரது உடல்களும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் புதை சாக்கடை தூய்மை செய்யும் பணியில் ஈடுபடாத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் இளவரசன், மேலாளர் கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, இளவரசனை கைது செய்துள்ளனர். கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: