திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 22 தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்தும், 9 துணை தாசில்தார்களுக்கு தாசில்தார் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி தனி தாசில்தார் (நிலமெடுப்பு) அருள்ஜோதி, மண்ணச்சநல்லூர் வருவாய் தாசில்தாராகவும், தொட்டியம் வருவாய் தாசில்தார் ஞானாமிர்தம் தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாராகவும் (நிலமெடுப்பு), துறையூர் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தார் கண்ணகி திருச்சி-திண்டுக்கல் நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், திருச்சி-திண்டுக்கல் நிலமெடுப்பு பிரிவு தனி தாசில்தார் சித்ரா, தொட்டியம் வருவாய் தாசில்தாராகவும், திருச்சி நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை அலகு நெடுஞ்சாலைகள், தனி மாவட்ட வருவாய் அலுவலர் தனி தாசில்தார் கனகமாணிக்கம், திருச்சி (கிழக்கு) வருவாய் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி (கிழக்கு) உணவு பொருள் வழங்கல் தனி தாசில்தார் சத்தியமூர்த்தி, ஸ்ரீரங்கம் ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் திருச்சி (கிழக்கு) உணவுப் பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணி திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரின் நேர்முக உதவியாளராகவும், அப்பதவியிலிருந்த செல்வசுந்தரி மருங்காபுரி தாசில்தாராகவும், மருங்காபுரி தாசில்தார் செல்வம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தனி தாசில்தாராகவும் (நிலமெடுப்பு), அப்பதவியில் இருந்த ராகவன், திருச்சி கனிமம் மற்றும் சுரங்கம் தனி தாசில்தாராகவும், கனிமம் மற்றும் சுரங்கம் தனி தாசில்தாராக இருந்த ஜெயப்பிரகாசம், திருவெறும்பூர் வருவாய் தாசில்தாராகவும், துறையூர் சமூக பாதுகாப்புத் திட்டம் தனி தாசில்தார் சந்திரகுமார் முசிறி கோட்ட கலால் அலுவலராகவும், அப்பதவியில் இருந்த சாந்தகுமார் தேசிய நெடுஞ்சாலை எண் 227 திருச்சி – சிதம்பரம் பிரிவு அலகு -1 திருச்சி தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொட்டியம் சமூக பாதுகாப்புத் திட்டம் தனி தாசில்தார் ஆனந்த், துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், அப்பதவியில் இருந்த லஜபதிராஜ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனி தாசில்தாராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனி தாசில்தாராக இருந்த தனலட்சுமி, திருச்சி கோட்ட கலால் அலுவலராகவும், அப்பதவியிலிருந்த பிரகாஷ், திருச்சி துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், நகர நிலவரித் திட்டம் அரியமங்கலம் தனி தாசில்தார் சண்முகவேலன் துவாக்குடி டாஸ்மாக் கலால் மேற்பார்வையாளராகவும், இப்பதவியிலிருந்த ரபீக் அகமது, மணப்பாறை நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாராகவும், மணப்பாறை நகர நிலவரித் திட்டம் தனி தாசில்தார் பாத்திமா சகாயராஜ் முசிறி வருவாய் தாசில்தாராகவும், முசிறி தாசில்தார் சண்முகப்பிரியா நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை அலகு (நெடுஞ்சாலைகள்) திருச்சி தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு: திருச்சி தனித்துணை தாசில்தார் (தேர்தல்) வீரப்பன், நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை அலகு தனி (டிஆர்ஓ) மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் தனி தாசில்தாராகவும் (நெடுஞ்சாலைகள்), லால்குடி தலைமையிடத்து தனி தாசில்தார் சிவக்குமார் ஸ்ரீரங்கம் வருாய் தாசில்தாராகவும், திருவெறும்பூர் தனித்துணை தாசில்தார் (தேர்தல்) லோகநாதன் அரியமங்கலம் நகர நிலவரித் திட்டம் தனி தாசில்தாராகவும், முசிறி மண்டல துணை தாசில்தார் வனஜா துறையூர் வருவாய் தாசில்தாராகவும், திருவெறும்பூர் மண்டல துணை தாசில்தார் விக்னேஷ் லால்குடி வருவாய் தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் மண்டல துணை தாசில்தார் பழனிவேல் ஆதிதிராவிடர் நலம் துறையூர் தனி தாசில்தாராகவும்,
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருச்சி உசூர் தலைமை உதவியாளர் ஆ-பிரிவு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் மணப்பாறை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் முருகன் துறையூர் சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தாராகவும், திருச்சி ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய கண்காணிப்பாளர் தமிழ்செல்வி மண்ணச்சநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பதவி உயர்வு வழங்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பணிமாறுதலுக்கு பின்னர் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக ஆட்சியர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் துறையூர் பகுதியில் உள்ள கணிம வளங்கள் கொள்ளைக்கு தாசில்தார் புஷ்பராணி துணைபோவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் இந்த டிரான்ஸ்பார்ம் லிஸ்ட் உடனடியாக அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. அதேநேரம் தாசில்தார்கள் பணியிடமாற்றத்தில் புகாருக்கு ஆளான துறையூர் தாசில்தார் புஷ்பராணியை மாவட்ட ஆட்சியர் காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“