நாய் குரைத்த விவகாரத்தில், ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் பகுதி ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு தெருவில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பூக்கொல்லை பகுதியை சேர்ந்த நெய் கிருஷ்ணன் என்பவரை பார்த்து, முத்துகிருஷ்ணனுக்கு சொந்தமாக உள்ள வளர்ப்பு நாய் குரைத்துள்ளது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் மாரி மாரி தாக்கி கொண்டதில் இருவருமே காயமடைந்துள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துக்கிருஷ்ணன், சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அடிதடி வழக்க பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் தற்போத கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“