திருச்சியில் 10 நாட்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சி; பொதுமக்கள் நடமாட ஆட்சியர் தடை!

சி.ஆர்.பி.எப் வீரர்களின் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடைபெற உள்ளதால், திருச்சி மணப்பாறை பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப் வீரர்களின் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடைபெற உள்ளதால், திருச்சி மணப்பாறை பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
trichy collector

திருச்சியின் மணப்பாறை பகுதியில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் மக்கள் மற்றும் ஆடு மாடு மேய்ச்சலுக்கு யாரும் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Advertisment

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் டிசம்பர் (02.12.2024) ஆம் தேதி முதல் (12.12.2024) ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 07:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் மத்திய பயிற்சி கல்லூரி (Central Training College,CRPF, Coimbatore Group Unit) கோயம்புத்தூர் குருப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ம.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: