/indian-express-tamil/media/media_files/3BiBClACkg1FsrRhEamJ.jpg)
திருச்சி மாவட்ட ஆட்சியர்
பிரதமர் மோடி ஆன்மீகப் பயணமாக திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தருகின்றார். மோடி வருவதை முன்னிட்டு திருச்சி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 19.01.2024-ந் தேதி இரவு 08. 00 மணியிலிருந்து அனைத்து கனரக வாகங்களையும் கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.
நாளை 20.01.2024-ந்தேதி காலை 06. 00 மணியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர தேவை வாகனங்களை தவிர, அனைத்து வாகனங்களையும், கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள வழித்தடத்தின் விபரம் வருமாறு;
மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.
சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டும்.
சேலம், நாமக்கல் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
கோவை, கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம், சோதனை சாவடி எண் : 2, திருச்சி சுற்றுச்சாலை வழியாக சென்று வர வேண்டும்.
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மற்றும் சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் MGR சிலை, சாஸ்திரிரோடு, கரூர் பைபாஸ், அண்ணாசிலை, ஓயாமாரி ரோடு சென்னை பை பாஸ் வழியாக செல்ல வேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர், அரியலூர், பெரம்பலூர் செல்லும் பேருந்துகள் அண்ணாசிலை, ஓயாமாரி ரோடு சென்னை பை பாஸ் வழியாக செல்ல வேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் லால்குடி, மண்ணச்சநல்லூர், குணசீலம் வழியாக செல்லும் நகர பேருந்துகள் அண்ணாசிலை, ஓயாமாரி ரோடு சென்னை பை பாஸ் வழியாக செல்ல வேண்டும்.
No.1 டோல்கேட்டிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் திருவானைக்கோவில் டிரங்க் ரோட்டை தவிர்த்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.
பாரத பிரதமரை வரவேற்க பஞ்சக்கரை ரோடு வரும் கட்சியினர் வாகனங்கள் திருவானைக்கோவில் டிரங்க் ரோடு சோதனை சாவடி எண் : 6 அருகே கட்சியினரை, இறக்கி விட்டு நெல்சன் ரோடு ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
பஞ்சக்கரை ரோடு ( ஹோட்டல் ஸ்ரீ) சந்திப்பு முதல் முருகன் கோவில், வடக்கு வாசல், அனைத்து உத்திர மற்றும் சித்திர வீதிகள், அடையவளஞ்சான் வீதிகளில் எந்த வாகனங்களும் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி இல்லை.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் மாம்பழச்சாலை, திருவானைக்கோவில் வழியாக அழகிரிபுரம் வரை சென்று மீண்டும் அதே வழியில் வர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.