திருச்சி மாநகரக் காவல்துறையில் 3 காவல் ஆய்வாளா்கள் உள்பட 284 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாநகர காவல் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர சைபா் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த கே.சண்முகவேல், காந்தி சந்தை காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், திருச்சி கோட்டை காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரான வி. நிர்மலா, சைபா் க்ரைம் பிரிவு பொறுப்பாளராகவும், முதன்மை நீதிமன்றக் காவல் ஆய்வாளரான ஆா். ரத்தினவள்ளி, கோட்டை காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், மாநகரக் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள், பெண் தலைமைக் காவலா்கள், பெண் காவலா்கள் என 281 பேருக்கு வெவ்வேறு காவல் நிலையம் மற்றும் வேறு பணியிடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாறுதல் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்