Advertisment

தீராத மக்கள் பிரச்னை... பதவியை ராஜினாமா செய்த தி.மு.க கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி : திருச்சியில் பரபரப்பு

திமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள திருச்சி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தனது வார்டில் நடைபெறவில்லை என்று கவுன்சிலர் ராஜினாமா செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Trichy Ms

திருச்சி கவுன்சிலர்

திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று தொடங்கியது. இதில் மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 60வது வார்டு தி.மு.க மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் பேசுகையில்; கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது வார்டில் எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

Advertisment

இது குறித்து நான் பலமுறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் செவி சாய்க்கப்படவில்லை. இதனால் எனது வார்டு மக்களுக்கு பதில் கூற முடியாமல் தவிக்கிறேன். ஆகையால் 25 ஆண்டு காலமாக மாமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றிய கொடுத்த மக்களுக்கும், அமைச்சர் நேருவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசினார்.

இதைத்தொடர்ந்து மேயர் மற்றும் ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தனர். ஆனால் என்னை தடுத்தீர்கள் என்றால் காரில் பெட்ரோல் வைத்திருக்கிறேன். இங்கேயே தீக்குளித்து விடுவேன் என்று ஆவேசமாக கூறினார். இதைத்தொடர்ந்து இதர கவுன்சிலர்களின் சமாதானத்தையும் ஏற்காத காஜாமலை விஜய் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினர்.

பின்னர் அவரது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்ற காஜமலை விஜய் சிறிது நேரம் கழித்து மீண்டும் மாநகராட்சி அலுவலகம் வந்து திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினரும், கட்சியினரும், அதிகாரிகளும் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சக மாமன்ற உறுப்பினர்கள் அவரை சமாதானப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

திமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள திருச்சி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தனது வார்டில் நடைபெறவில்லை என்று அமைச்சர் கே.என். நேருவின் தீவிர ஆதரவாளரும், திமுக கவுன்சிலருமான ஒருவர் ராஜினாமா செய்து, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியதால் திமுகவினரிடத்தில் பரபரப்பு நிலவியது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tiruchirapalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment