திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தமது தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் வார்டு வாரியா சென்று பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்து வருகின்றார். தீர்க்கப்படாத குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் மேல் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார்.
அந்த வகையில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி வார்டு 36, 37, 44, 46, 47, 48 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து, மனுக்களை பெற்றுக்கொண்டு, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அப்போது, தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் மார்ட்டின் தேவதாஸ், செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருநாவுக்கரசர் எம்.பி.யை சந்தித்து ஒரு கோரிக்கை அளித்தனர். தொடர்ந்து பேசிய அவர்கள், தமிழக அரசு கிளினிக்கல் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி, மாநகராட்சி பகுதியில் ஆய்வுக்கூட அளவு 750 சதுர அடியிலும், நகராட்சி பகுதியில் 500 சதுர அடியிலும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை மாற்றி போதிய அளவு என்று மத்திய அரசு நிர்ணயித்து உள்ளதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த ஆவண செய்ய வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு கவுன்சில் அமைத்து தரவும், அந்த கவுன்சிலில் லேப் டெக்னீசியன்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.மேலும், மருந்து கடைகளில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதை தடை செய்ய வேண்டும் என்ற இந்த நீண்ட நாள் கோரிக்கைகளை எம்.பி.யிடம் கொடுத்தோம் என கூறியுள்ளனர்.
குறைகேட்பு கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எல்.ரெக்ஸ், கோவிந்தராஜ், பெனட் அந்தொனிராஜ், தர்மராஜ், நீலமேகம், பியூலா மாணிக்கம், கார்த்தி, அனுசுயா INTUC மாவட்ட தலைவர் சரவணன், திமுக வட்டச்செயலாளர்கள் துரை, தவசீலன், சுப்ரமணியன், விஸ்வநாதன், பன்னீர், நிர்வாகிகள் தேவதாஸ், தவசி, காங்கிரஸ் கோட்ட தலைவர் செல்வகுமார், காங்கிரஸ் வார்டு தலைவர்கள் ஜாகிர் உசேன், சார்லஸ் ரவி, ஆபிரகாம், மார்டின், ரவி, பாலு, ஹக்கீம், எழில், அர்ஜுன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“