/indian-express-tamil/media/media_files/2025/04/14/ELmjWDwbrHkDPdpnRcHr.jpg)
திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த எம்.பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்பட்டு வருகிறார்.
ஒரு கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளை தீர்க்க அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் கூறுவதை கட்சி தலைமை கேட்க வேண்டும். அதே போல கட்சி தலைமைக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அது புற்றுநோய் போல் பரவி இயக்கத்தையே அழித்து விடும்.
நாங்கள் திமுக கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். கூட்டணிக்குள் எந்த வித குழப்பத்தையும் ஏற்படுத்தாத வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும். ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒட்டிய போஸ்டருக்கு அக்கட்சியின் தலைவரே கண்டனம் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மணவை தமிழ் மாணிக்கம், டாக்டர் ரொஹையா, சோமு, சேரன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.