/indian-express-tamil/media/media_files/PZzvjtn6Bh2WttawD3DF.jpg)
போலீஸ்
திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கேபிள் சேகர். இவரது மனைவி கயல்விழி. இவரும் அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தவர். தொழில் போட்டி காரணமாக கேபிள் சேகர், அவரது அண்ணன் பெரியசாமி மகன்களால் ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட நிலையில், கேபிள் சேகரின் மகன் முத்துகுமார், (30.04.2024)ம் தேதி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி எதிரே பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பெரியசாமி மகன் லோகநாதன் உட்பட 6 பேரை அரியமங்கலம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், முத்துகுமாரை வெட்டிவிட்டு தப்பியோடியவர்களை பிடிக்க முயற்சிக்கவில்லை என மாநகர காவல் ஆணையர் காமினிக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அன்று அப்பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் விஜயன், முதல்நிலை காவலர் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் மாநகர காவல் ஆணையர் காமினி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.