/indian-express-tamil/media/media_files/2024/11/15/yO9trSj1wgRCguVgqV4I.jpg)
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் கூரியர் மூலம் பெறப்பட்டு பயன்பாட்டில் இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார், உத்தரவின் பேரில், தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபடுவோரை தேடிவந்தனர். அப்போது போதை மருந்து கடத்தும் கும்பல் கொள்ளிடம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படையினர் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கொள்ளிடம் பகுதியில் தங்கியிருந்த கா்நாடக மாநிலம் கோலார் வட்டம் பிரவீன்குமார் (42), திருச்சி மன்னார்புரம், ராஜராஜன் நகா் வினோத்குமார் (28), திருநெல்வேலி, வி.எம்.சத்திரம், டிஎன்எச்பி காலனி ராமசாமி (42), சேலம் வாழப்பாடி பார்த்திபராஜ் (31), திருச்சி திருவெறும்பூா் சுபீா் அஹமத் (37), மற்றும் மணிகண்டன் (23), சிஜூ (33), பாலசுப்பிரமணியன் (38)ஆகிய எட்டு பேரை போலீஸாா் கைது செய்து கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கிரிண்டா்(Grindr) என்ற சமூக வலைதளச் செயலி மூலம் இணைந்து, ஓரினச் சோ்க்கையில் ஈடுபட போதை மருந்துகளை உபயோகித்ததும், மேலும், அந்தச் செயலியில் உள்ள நபா்களுக்கு போதை மருந்துகளை கூரியா் மூலம் விற்றதும் தெரியவந்தது. இதுதொடா்பாக அந்த தனியார் (DTDC) கூரியா் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மெத்தபெட்டமின் 21 கிராம், ஊசிகள் 10, 16 கிராம் தங்கச் சங்கிலி, 5 கைப்பேசிகள், கேமரா 1, மோடம் 2, சோடியம் குளோரைடு, ரூ.5,145 ரொக்கம், கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் ஸ்ரீரங்கம் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
க.சண்முகவடிவேல்
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.