/indian-express-tamil/media/media_files/2025/09/16/police-truih-2025-09-16-11-09-55.jpg)
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தொடர் குற்றச் சம்பங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது தடுப்புக் காவல் நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி எஸ் பி உத்தரவிட்டார். அதன்படி ஒரே நாளில் 12 நபர்கள் மீது (குண்டாஸ்)தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது திருச்சி ரவுடிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள உருண்டைமலை பின்புறம் உள்ள பாறைகுழி அருகே கடந்த 07.08.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மெய்யப்பன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவை கைப்பற்றப்பட்டு அவர் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், புத்தாநத்தம் மற்றும் துவரங்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட அழகேஸ்வரன், சுபாஷ், கரண், நவநீத கிருஷ்ணன், வெள்ளைச்சாமி, மணிகண்டன் ஆகியோர் மீதும், அதேபோல், துவரங்குறிச்சி காவல் நிலையத்தினரால் வடக்கு பதிவு செய்யப்பட்ட குட்டி (எ) சங்கபிள்ளை, ஹரிஹரன், பாலமுருகன், அரவிந்த்ராஜ், ஸ்ரீராம் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/16/gondowsa-2025-09-16-11-48-11.jpg)
மேற்படி பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 12 நபர்களும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பதால் அவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரைத்ததன் பேரில் மேற்கண்ட 12 நபர்கள் மீதும் ஒரே நாளில் குண்டாஸ் பாய்ந்தது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கான சான்றுகளை சிறையில் உள்ள அவர்களுக்கு சிறை காவலர்கள் வழங்கினர்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 85 பேர் மீது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us