இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலையொட்டி திருச்சி மாநகர காவல் துறையில் முதல் கட்டமாக 27 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அந்தவகையில் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில் திருச்சி மாநகரில் உள்ள பொன்மலை, ஸ்ரீரங்கம், ஏர்போர்ட் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள் அண்டை மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அண்டை மாவட்டங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் திருச்சி மாநகர காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“