/indian-express-tamil/media/media_files/PZzvjtn6Bh2WttawD3DF.jpg)
திருச்சி போலீஸ்
நாடாளுமன்றத் தோ்தலையொட்டி திருச்சி மாநகர காவல் துறையில் முதல்கட்டமாக 28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திருச்சி மத்திய மண்டலத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில்
திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயா, அரியமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சேரன், விமான நிலைய ஆய்வாளா் மலைச்சாமி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ஆனந்தி வேதவல்லி, இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளா் சிந்துநதி, காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு ஆய்வாளா் அருள்ஜோதி, பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளா் கார்த்திகா, உறையூா் குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன், கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளா் சுலோச்சனா, ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஆய்வாளா் ஸ்ரீதா் ஆகியோர் தஞ்சாவூா் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளா் கயல்விழி, மாநகர குற்றப்பதிவேடு காப்பக ஆய்வாளா் ராஜேந்திரன், நுண்ணறிவு பிரிவு (பாதுகாப்பு) முருகவேல், கண்டோன்மென்ட் ஆய்வாளா் சிவக்குமார், மாநகரக் குற்றப்பிரிவு ஆய்வாளா் கோசலைராமன், உறையூா் ஆய்வாளா் ராஜா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளா் வனிதா, மாநகரக் குற்றப்பிரிவு 2-ஆவது பிரிவு ஆய்வாளா் சரஸ்வதி, ஸ்ரீரங்கம் ஆய்வாளா் அரங்கநாதன், காந்திமார்க்கெட் ஆய்வாளா் ரமேஷ், திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளா் கருணாகரன் ஆகியோர் திருச்சி சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பொன்மலை குற்றப்பிரிவு ஆய்வாளா் கார்த்திக் பிரியா, பாலக்கரை ஆய்வாளா் நிக்ஸன், தில்லைநகா் ஆய்வாளா் வேல்முருகன், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் அஜிம், கோட்டை போக்குவரத்து ஆய்வாளா் மதிவாணன், கண்டோன்மென்ட் போக்குவரத்து ஆய்வாளா் ரமேஷ், ஆயுதப்படை ஆய்வாளா் கார்த்திகேயன் ஆகியோர் திருச்சி சரகத்துக்கும் (புறநகர் பகுதிகளுக்கும்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.