திருச்சி அருகே ஆம்னி வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : சிறுமி உள்பட 6 பேர் பலி
திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி அருகே லோடு லாரியும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதியதில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாபக உயிரிழந்தனர்.
திருச்சி சேலம் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வழக்கமாகவே இருக்கின்றது திருச்சியில் இருந்து முசிறி வரை சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதாலும் காவிரி கரையை ஒட்டியே சாலை செல்வதால் வளைந்து நெளிந்து, செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது தொடர்கதை ஆகிறது
Advertisment
அதேபோல் இன்று அதிகாலை திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி அருகே லோடு லாரியும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதியதில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாபக உயிரிழந்தனர். சேலம் எடப்பாடி மாவட்டத்தில் இருந்து 9 பேர் ஆம்னி வேன் மூலம் கும்பகோணத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அதேபோல திருச்சியில் இருந்து வந்த லாரி கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்னி வேன் திருவாசி என்ற இடத்திற்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் லாரி மீது மோதியதில் இந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. லாரியும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த 2 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நெடுஞ்சாலையில் போக்குவரத்தைச் சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதிகாலை நேரம் என்பதால், டிரைவர்கள் யாராவது ஒருவர் தூங்கியிருக்கலாம். அதனால் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/