Advertisment

தப்பி சென்ற இளைஞர்கள்: பறிமுதல் செய்த பைக் எங்கே? காவலர்களுக்கு கெடு வைத்த எஸ்.பி வருண்குமார்!

24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதோடு பைக்கை பறிமுதல் செய்யவில்லை என்றால் அனைவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி விடுவதாக அதிரடியாக எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Police Trichy

திருவெறும்பூர் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிய ஓடிய நிலையில் அவர்களது பைக்கை பறிமுல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போலீசார் தற்போது நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டதாக எஸ்.பி-க்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதோடு பைக்கை பறிமுதல் செய்யவில்லை என்றால் அனைவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி விடுவதாக அதிரடியாக எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

எஸ்.பியின் இந்த உத்தரவால் அதிர்ந்து போன திருவெறும்பூர் போலீசார் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குவளக்குடி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இரவு ரோந்து பணியில் திருவெறும்பூர் போலீசார் ஈடுபட்டு இருந்தபோது அந்த வழியாக ஆயுதங்களுடன் பைக்கில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பைக்கை மீட்டு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தியதோடு இது சம்பந்தமாக இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் தகவல் குறிப்பு எழுதி வைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த பைக் பைனான்ஸில் வாங்கப்பட்டது என்றும், தனியார் நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட பைக் உரிமையாளர்களிடம் கேட்டதாகவும் அவர்கள் பைக் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்து திருவெறும்பூர் காவல் நிலைய போலீசாரிடம் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்தினர் பேசி வண்டியை எடுத்துச் சென்று விட்டனர். இதன் காரணமாக திருவெறும்பூர் உட்கோட்ட சரக்கத்திற்கு புதிய டிஎஸ்பியாக ஜாபர் சித்திக், சம்பந்தப்பட்ட பைக் இங்கு இல்லை என்றும், அந்த பைக் நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக குற்றவாளிகள் கைது செய்யப்படாததும் தெரிய வந்ததால் இது குறித்து திருச்சி எஸ்பி வருண்குமாரிடம் முறையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், திருச்சி எஸ்பி சம்பந்தப்பட்ட திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் யார், யார் இந்த தவறை செய்தார்கள் என்பதை கேளுங்கள், 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட பைக் மற்றும் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும், இல்லை என்றால், அனைவரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள் என காட்டமாக பேசியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஜாபர் சித்திக் திருவெறும்பூர் போலீசார் அனைவரையும் ஒன்று கூட்டி சம்பந்தப்பட்ட பைக் மற்றும் அதை ஓட்டி வந்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், இல்லை என்றால் நீங்கள் அனைவரும் ஆயுதப்படைக்கு மாற்றுவதற்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார் என்று கூறியதோடு மட்டுமில்லாமல், ஜாபர் சித்திக் அதிரடியாக  நேற்று முன்தினம் மதியம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் எழுத்தர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை அதிரடியாக வெளியேற்றியுள்ளார்.

இதனைத் தொடாந்து  துவாக்குடி காவல் நிலையத்தில் இருந்த போலீசாரை கொண்டு வந்து எழுத்தர் மற்றும் பாதுகாப்பு பணிக்கு நியமித்தார். இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவெறும்பூர் போலீசார் அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்பு உடைய பைக்கை மீட்டதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய அரியமங்கலத்தை சேர்ந்த பாலாஜி, சந்தோஷ், ஆகிய இரண்டு பேரையும் இரவோடு இரவாக கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ரத்தினவேல் (எ) கோட்டர் ரத்தினவேல் என்பவன் ஏற்கனவே லால்குடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளான். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எஸ்.பி.யின் இந்த அதிரடி நடவடிக்கையால் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரிகளிடம் பரபரப்பும் பதட்டமும் பற்றிக் கொண்டது.

இனி யாரேனும் இதுபோன்று தவறுகள் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி வருண்குமார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tiruchirapalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment