திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில், அன்னை ஆசிரமம் குழந்தைகள் இல்லத்தினை சேர்ந்த 70 குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கல்லணை, அறிவியல் பூங்கா மற்றும் மான் பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிடும் வகையில் ஒருநாள் சுற்றுலாவை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் இன்று (08.01.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகள் வெளியுலக அறிவினை வளர்த்து கொள்ளும் விதமாகவும், அறிவியல் கல்வி சார்ந்த அறிவினை வளர்த்து கொள்ளும் விதமாகவும் குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் கூறியிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/school-tour3.jpeg)
இதன் அடிப்படையில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் பி.எஸ்.ஆர்,ட்ரஸ்ட் (PSR Trust) இணைந்து சுற்றுலா நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு இந்நிகழ்வின் முதற்கட்டமாக, அன்னை ஆசிரமம் குழந்தைகள் இல்லத்தினை சேர்ந்த 70 பெண் குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் கல்லணை, ஸ்டெம் பார்க் அறிவியல் பூங்கா, பி.எச்.இ.எல். பகுதியில் உள்ள மான் பார்க் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு இன்று சுற்றுலா செல்வதற்க்கு திட்டமிடப்பட்டது. இச்சுற்றுலா செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதன் பிறகு பேசிய அவர், பேசுகையில்; இந்தச் சுற்றுலா மூலமாக குழந்தைகள் இல்லங்களில் தங்கி உள்ள குழந்தைகள் வெளியுலக அறிவினையும், தற்போது உள்ள அணைகளில் மிகவும் பழமையான அணையாகிய கல்லணை அணையின் வரலாறு மற்றும் முன்னோர்களின் பழமையான கால அறிவினையும், அறிவியல் கல்வி அறிவினையும் எளிதாக வளர்த்து கொள்ள இயலும். இச்சுற்றுலா திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தொடர்ந்து சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/school-tour.jpeg)
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ப.ராகுல் காந்தி, குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன், உறுப்பினர், நேத்தலிக் டான் ஆப் பாப்பு, மக்கள் தொடர்புத்துறை அலுவலர், PSR Trust இயக்குநர் சேக் அப்துல்லா உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள், குழந்தைகள் உதவி மையம்-1098 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“