தமிழ் நாட்டின் மையப் பகுதியான திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பானம் வரை நேரடி விமான சேவை வருகின்ற மார்ச் 30 முதல் துவங்கப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த புதிய பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, தென்னிந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுப் சிறப்பு மிக்க இடங்களுக்கு வணிக மற்றும் சுற்றுலா ரீதியான பயணங்களை மேற்கொள்ள விரும்புவோருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகின்ற மார்ச். 30 முதல் துவங்கப்படும் இந்த தினசரி நேரடி விமான சேவைகளின் மூலம் இரு மாகாணங்களுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களில் வளர்ச்சி அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/08/airport-trichy-166313.jpg)
இந்த புதிய விமானப் பாதை குறித்து இண்டிகோ நிறுவனத்தின் உயர் அதிகாரி வினய் மல்ஹோத்ரா கூறுகையில், இந்த புதிய திட்டமானது சென்னை மற்றும் யாழ்ப்பானம் இடையிலான விமானப் பயணங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து செயல்முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது, இந்த விமான சேவையின் மூலம் இந்தியாவின் சென்னை,பெங்களூர், ஹைதரபாத், மும்பை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலிருந்து இலங்கைக்கு வாரம் 60 விமானங்கள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்