Advertisment

வீடு பட்டா மாற்ற லஞ்சம் : திருச்சியில் வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர் கைது

திருச்சியில் பட்டா மாற்றுவதற்காக கூலித்தொழிலாளியிடம் ரூ7000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியும் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Trichy VAO Arrest

திருச்சிராப்பள்ளி

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 20 சென்ட் புஞ்சை நிலத்தை 10 ஆயிரத்திற்கு வாங்கி அதில் வீடு கட்டி வசித்து வருகிறார். அந்த இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் பெறுவதற்காக கடந்த 26.9.23 ஆம் தேதி விண்ணப்பம் செய்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, கடந்த 20. 12.2023 ஆம் தேதி இவரது விண்ணப்பம் இணையதளத்தில் பார்த்தபோது நிராகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் கருப்பன் தனிப்பட்டா வேண்டி மீண்டும் கடந்த 19 ஆம் தேதி இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார். அவரது மனுவின் நிலை குறித்து 22.1.2024 ஆம் தேதி பார்த்தபோது சம்பந்தப்பட்ட வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கருப்பன் வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ சோலைராஜ் என்பவரை சந்தித்து தனது பட்டா மாறுதல் குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஏஓ சோலைராஜ் உங்களுக்கு பட்டா மாறுதல் கிடைப்பதற்கு நான் தயார் செய்து அனுப்பி வைத்தால் தான் தனிப்பட்டா உங்களுக்கு கிடைக்கும். அதற்காக பத்தாயிரம் ரூபாய் தனக்கு தனியாக கொடுத்து விட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு கருப்பன் 1997 இல் நான் வாங்கிய இடத்துக்கே பத்தாயிரம் ரூபாய் தான் கொடுத்தேன். பட்டா மாத்துவதற்கு பத்தாயிரம் ரூபாய் கேட்கிறீர்களே, நான் கூலித்தொழிலாளி, உங்க தொகையை குறைச்சு சொல்லுங்க சார் என்று கேட்டுள்ளார். அதற்கு விஏஓ சோலை ராஜ் மூவாயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ஏழாயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் பண்ணித் தர முடியும், இல்லன்னா போன முறை மாதிரியே இப்பவும் உங்க பட்டா தொடர்பான மனு ரிஜெக்ட் ஆகிடும் என்று எச்சரித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பன், லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில்,  திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று டிஎஸ்பி மணிகண்டன் என்பவரிடம் புகார் கொடுத்தார். இந்தப்புகாரின் அடைப்படையில் டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் பிரசன்னவெங்கடேஷ், பாலமுருகன் குழுவினர் கொடுத்த ஆலோசனையின்படி, இன்று வி.ஏ.ஓ.சோலைராஜ் என்பவரை சந்தித்த கருப்பன் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில் ரசாயணம் தடவிய லஞ்ச பணத்தை வி.ஏ.ஓ.சோலைராஜிடம் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வி.ஏ.ஓ. சோலைராஜூவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதோடு இந்த லஞ்சப்பணத்தை பெறுவதற்கு வி.ஏ.ஓ.வுக்கு உதவியாக இருந்த பாஸ்கர் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் வி.ஏ.ஓ., ஒருவர் லஞ்ச வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இன்று திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மின்வாரிய அலுவலகம் என பல்வேரு வருவாய் ஈட்டக்கூடிய அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் ரொம்பவுமே கராராகவும், அச்சத்துடனேயே பணியாற்றி வருகின்றனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment