scorecardresearch

த.மா.க தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று

Tamilnadu Update : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியன் தலைவர் ஜி.கே.வாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

த.மா.க தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியன் தலைவர் ஜி.கே.வாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்று எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொண்டேன்.

பரிசோதனையின முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி நோய் தொற்றில் இருந்து குணமாகும்வரை என்னை தனிமைப்படுத்தக் கொள்கிறேன் என் தெரிவித்துள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu tsc leader g k vasan tested positive covid