/indian-express-tamil/media/media_files/2025/10/03/madurai-high-court-2025-10-03-11-11-53.jpg)
கரூரில் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தாக்கல், செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று (அக்.3) விசாரணைக்கு வருகின்றன.
கடந்த 27ஆம் தேதி விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பரிதாபகரமான உயிரிழப்பிற்கு வழிவகுத்தது.
இதையடுத்து த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர்மீது கரூர் நகர போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்தச் சம்பவத்தின் காரணங்களை ஆராய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், பரிதாபகரமான நிகழ்வைத் தொடர்ந்து விஜய் தலைமையிலான அக்கட்சி தனது பிரச்சாரக் கூட்டங்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘தனது மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. பரப்புரை கூட்டத்தில் போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை. கூட்டத்தை தானும் கட்சியினரும் மட்டுமே ஒழுங்குபடுத்தினர். ஆனால் குண்டர்கள் புகுந்து கற்கள், செருப்புகள் வீசினர்’ என்று தெரிவித்து புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்மல்குமார் அவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.
அதேவேளை, ‘கூட்ட நெரிசலில் ஏற்பட்ட 41 உயிரிழப்பின் பின்னணி குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றன. இதில் சதி இருக்கிறது’ எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கே.கே.ரமேஷ், கதிரேசன், தங்கம் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணை கோரி 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த பொதுநல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி ஜோதிராமன் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Today, the Madurai Bench of the Madras High Court is flooded with public interest litigation petitions related to the Karur stampede that claimed 41 lives during actor C. Joseph Vijay's Tamilaga Vettri Kazhagam campaign on September 27, 2025. Here, are the list of cases ...1
— Mohamed Imranullah S (@imranhindu) October 3, 2025
இந்த வழக்கில், முதல் முதல் பொதுநல மனுவை கரூரைச் சேர்ந்த ஆட்டோரிக்ஷா உரிமையாளர் ஏ. செந்தில்கண்ணன் தாக்கல் செய்துள்ளார். 2-வது மதுரையைச் சேர்ந்த கே. கதிரேசன், 3-வது திமுகவைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் நகராட்சித் தலைவர் கே.கே.சி.பி பிரபாகர பாண்டியன், 4-வது கரூரைச் சேர்ந்த எம். தங்கம், 5-வது மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், 6-வது சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி, 7-வது பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, ஆகியோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.